Asianet News TamilAsianet News Tamil

விடாமல் அடிச்சு ஊத்தும் கனமழை.. 19 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இதோ முழு விவரம்..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதை அடுத்து வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளது.

Tamilnadu Heavy rain.. Holidays for 14 district schools and colleges
Author
First Published Nov 11, 2022, 6:43 AM IST

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து இன்று சென்னை, திருவள்ளூர், வேலூர்,  திருவாரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதை அடுத்து வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது, இன்று தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்பதால் வரும் 13ம் தேதி வரை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இதையும் படிங்க;- திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை.. உயர்நீதிமன்ற மதுரை அதிரடி

Tamilnadu Heavy rain.. Holidays for 14 district schools and colleges

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதலே கனமழை பெய்ய தொடங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதையும் படிங்க;-  வங்க கடலில் புதிய புயல் சின்னம்..! நாளை முதல் மிக கன மழை..! எந்த எந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை என தெரியுமா.?

Tamilnadu Heavy rain.. Holidays for 14 district schools and colleges

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதேபோல், கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை என  முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

Follow Us:
Download App:
  • android
  • ios