மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. இதில், தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரை முழுவதும் வெளியேற்றாமல் இருப்பதால் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது.
சென்னை அருகே மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. இதில், தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரை முழுவதும் வெளியேற்றாமல் இருப்பதால் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஊழியர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையும் படிங்க;- மின் கட்டணத்தை 10% குறைத்த தமிழக அரசு.. யாருக்கு, எவ்வளவு தெரியுமா ? முழு விபரம்
இந்நிலையில், சென்னை அடுத்த மாங்காடு மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி(42) உயிரிழந்தார். வேலைக்காக நடந்து சென்றபோது கால் தவறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லட்சுமிபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை.. உயர்நீதிமன்ற மதுரை அதிரடி