Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் சேவை மனப்பான்மையுடன் நிறைய பேர் உள்ளனர்… ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!!

தமிழகத்தில் சேவை மனப்பான்மையுடன் நிறைய பேர் அமைதியாக மக்களுக்கு தொண்டு செய்து வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

tamilnadu has a lot of service minded people says governor rn ravi
Author
First Published Oct 27, 2022, 10:05 PM IST

தமிழகத்தில் சேவை மனப்பான்மையுடன் நிறைய பேர் அமைதியாக மக்களுக்கு தொண்டு செய்து வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேயுள்ள கொணமங்கலம் கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அறிவுசார் மற்றும் வளர்ச்சி குறைபாடுடைய மாணவர்களுக்கு தனியார் (சிருஷ்டி பவுண்டேசன்) சார்பில் இயற்கை முறையில் கட்டப்பட்ட 5 வீடுகளை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் நிறையபேர் அமைதியான முறையில் சமுதாயத்திற்காக பல்வேறு மக்கள் நல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நான் கொணமங்கலத்திலுள்ள தனியார் அறக்கட்டளைகள் சார்பில் ஆர்டீசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  பல்வேறு நல திட்ட பணிகளை மேற்கொண்டு வருவதை பார்க்க வேண்டுமென கூறினேன்.

இதையும் படிங்க: பள்ளி கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் 3 மாதத்திற்குள் நிரப்பப்படும்... அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி!!

அவர்கள் எனக்கு அழைப்பு விடுக்கவிட்டாலும் சமுதாயத்திற்காக அவர்கள் செய்யும் மகத்தான பணியினை பார்பதற்காக  நானே என்னுடைய விருப்பத்தின் பேரில் வருகை புரிய விரும்புவதாக தனியார் அறக்கட்டளை நிர்வாகத்திடம் தெரிவித்தேன். இது கிராமப்புற பகுதியில் அமைந்துள்ளதால் தங்கள் வருகைக்கு இந்த பகுதி சவுகரியமாக இருக்காது என தெரிவித்தார்கள். அதற்கு நான், கிராமப்புற விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன், ஆகையால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தனர். மேலும் மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு செய்வது என்பது மகத்தான பணி. யூனிடெட் ஸ்டேட்டில்  ஆர்டீசம் குறைபாடுகளால் 2 சதவீதம் மக்கள்  பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த பாதிப்பு இந்தியாவில் குறைவாக காணப்படுகிறது.

இதையும் படிங்க: இஸ்லாமிய மத குருவிடம் தீவிர விசாரணை… அவரது வீட்டை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு!!

இருந்தாலும் அரசு சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டாலும், இதற்கு என்று தனியாக கவனம் செலுத்த முடியாமல் உள்ளது. இது போன்றவர்களுக்கு சமுதாய பணியில் இது போன்றவர்களின் சேவை மனப்பான்மை பங்கு என்பது மகத்தானது. தமிழகத்தில் நமது பாரதத்தின் பழமையான கலாச்சாரம் பாரம்பரியம் நிறைந்த பகுதி மட்டுமல்லாமல் இங்கு சேவை மனப்பான்மையுடன் நிறைய பேர் அமைதியாக மக்கள் தொண்டு செய்து வருகிறது என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து சிருஷ்டிபவுண்டேஷனில் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பணி அணையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios