இஸ்லாமிய மத குருவிடம் தீவிர விசாரணை… அவரது வீட்டை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தில் இஸ்லாமிய மத குருவிவிடம் காவல்துறையினர் மூன்று மணி நேரமாக தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரது வீட்டை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

police had Intensive investigation with Islamic cleric at nellai

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தில் இஸ்லாமிய மத குருவிவிடம் காவல்துறையினர் மூன்று மணி நேரமாக தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரது வீட்டை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபீன் என்ற நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுத்தொடர்பான வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபரின் வீட்டில் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்பட காவல் உயர் அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விரைவில் என்.ஐ.ஏ கையில் கோவை கார் வெடிப்பு வழக்கு… டி.ஜி.பி சைலேந்திரபாபு தகவல்!!

இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இன்று இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில பொதுச்செயலாளர் அப்துல் காதர் மண்பையிடம் நெல்லை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து நெல்லை மாநகரம் மேலப்பாளையம் ஏகே கார்டன் பகுதியில் வசித்து வரும் முகமது உசேன் மண்பை என்பவரிடம் ஆய்வாளர் ரவீந்திரன் ஜேம்சன் ஜெபராஜ் ஆகியோர் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதை ஒட்டி அந்த பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விசாரணைக்கு பின்னர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. 

இதையும் படிங்க: சாலையில் கேட்பாரற்று இருந்த கார் மற்றும் பைக்குகள்… காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை!!

முகமது உசேன் மண்பை ஏற்கனவே கோயம்புத்தூரில் மத குருவாக இருந்துள்ளார். தற்போதும் அவர் இஸ்லாமிய பிரச்சார இயக்கத்தில் நிர்வாகியாக இருந்து வருகிறார். மேலும் மேலப்பாளையத்தில் இருந்தபடி தற்போது அவர் டிராவல்ஸ் ஏஜென்சி மற்றும் கேட்டரிங் தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் முகமது உசேன் மன்பே வெளிநாடுகளுக்கு சென்று வந்ததாகவும் தெரிகிறது. எனவே கோயமுத்தூரில் ஜமேஷா முபீனின் கூட்டாளிகளிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் முகமது உசேன் மண்பேயிடம் போலீசார் கடந்த மூன்று மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர். இதனால் முகமது உசேன் வீட்டை சுற்றி போலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios