Asianet News TamilAsianet News Tamil

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேர் மாற்றம்!

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

Tamilnadu govt order to transfer IAS officials smp
Author
First Published Oct 12, 2023, 4:25 PM IST | Last Updated Oct 12, 2023, 4:25 PM IST

தமிழகத்தில் அவ்வப்போது ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 9 ஐஏஎஸ் அதிகாரிகளை நேற்று பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.  மேலும், ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த காகர்லா உஷா மாற்றப்பட்டு புதிய செயலாளராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். காகர்லா உஷா ஐஏஸ் தமிழ்நாடு சுற்றுலாத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறப்பு: மேல்முறையீடு செய்யும் கர்நாடகா!

அதேபோல், வணிக வரித்துறை முதன்மை செயலாளராக இருந்த தீரஜ் குமார், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் (டிட்கோ) மேலாண்மை இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios