தமிழகத்தில் மீண்டும் பேருந்து கட்டணம் உயர்வா..? அமைச்சர் சொன்ன 'அதிர்ச்சி' தகவல் !
TN Govt : பிரதமர் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. தேர்தலுக்கு முன் வெளி நாட்டில் இருக்கக்கூடிய கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் திமுக சார்பில் திராவிட பாசறை பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ’சிலிண்டருக்கு ஏற்கனவே மத்திய அரசு கொடுத்து வந்த மானியத்தை முழுமையாக கொடுக்கவில்லை.
பிரதமர் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. தேர்தலுக்கு முன் வெளி நாட்டில் இருக்கக்கூடிய கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார். பெட்ரோல், டீசல் விலை காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட, பாஜக ஆட்சியில் அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது.
இவையெல்லாம் தேவையில்லாமல் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை. இவற்றையெல்லாம் முழுமையாக குறைக்காமல், மத்திய அரசு ஏற்றி வைத்துள்ள விலையை, மாநில அரசுகளுக்கு வரக்கூடிய வருவாயை இழந்து விலையை குறைக்க வேண்டும் என்று சொல்வது, தேவையற்ற வாதம்.பேருந்து கட்டணம் உயராது என்று தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளதாகவும், சென்னையில் முதல் கட்டமாக மின்சார பேருந்துகள் 500 தொடங்கப்பட உள்ளது என்று கூறினார்.