"எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.. அடிச்சு தூக்குங்க.!" அதிமுகவினருக்கு எஸ்.பி வேலுமணி போட்ட ஆர்டர் !
S.P Velumani : திமுக ஆட்சிக்கு வந்தாலும், கோவையில் காலுான்ற முடியவில்லை என்ற ஆதங்கம், திமுக தலைமையிடம் இருந்தது. அதை முறியடிக்க வேண்டுமென்பதற்காகவே, அமைச்சர் செந்தில்பாலாஜியைக் களமிறக்கி, உள்ளாட்சித் தேர்தலில் வேலுமணிக்கு 'செக்' வைத்தார் ஸ்டாலின்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன் கோவைக்கு பிரசாரத்துக்கு வந்த ஸ்டாலின், தன்னுடைய பேச்சில் மற்றவர்களை விட, வேலுமணியைக் குறி வைத்துத் தாக்கிப் பேசியதோடு, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே மாதத்தில் நீங்கள் சிறைக்குப் போக வேண்டியிருக்கும்' என்றும் ஆவேசத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அவருடைய பிரசாரத்தை முறியடித்து, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளிலும் கடுமையாகப் பணியாற்றி, 15 தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெற வைத்தார் வேலுமணி.
முக்கியமாக, கோவை மாவட்டத்தில் திமுக வசமிருந்த ஒரு தொகுதியையும் கைப்பற்றி சாதனை படைத்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது கிடைத்த வெற்றியை விட, இது பிரமாண்ட வெற்றி என்பதால், அதற்குக் காரணமான வேலுமணி மீது ஸ்டாலினுக்கு கோபம் அதிகரித்திருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தாலும், கோவையில் காலுான்ற முடியவில்லை என்ற ஆதங்கம், திமுக தலைமையிடம் இருந்தது. அதை முறியடிக்க வேண்டுமென்பதற்காகவே, அமைச்சர் செந்தில்பாலாஜியைக் களமிறக்கி, உள்ளாட்சித் தேர்தலில் வேலுமணிக்கு 'செக்' வைத்தார் ஸ்டாலின்.
இந்நிலையில் கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ சாய் விவாகா மஹாலில் கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்துகொண்ட இதில் கோவை நீலகிரி ஈரோடு சேலம் உட்பட 17 மாவட்டங்களில் இருந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவைச்சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திமுக அரசு விளம்பரம் தேடிக் கொள்கிறது. நம்மை மட்டுமல்ல, ஊடகங்களையும் திமுகவினர் மிரட்டுகிறார்கள். சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது. அதில், ஆட்சி அமைத்த ஓராண்டில் 85 சதவீத மக்களின் எதிர்ப்பை பெற்ற கட்சி திமுக என்ற அவப்பெயர் பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி செய்து கிடைத்தது தான்.
திமுகவினர் வழக்குப் போட்டு நம்மை அச்சுறுத்துகிறார்கள். இதற்கெல்லாம் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்தவர்கள் கவலைப்பட வேண்டாம். இவற்றை திறம்பட கையாள வழக்கறிஞர் பிரிவு தயாராக உள்ளது. எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம். திமுகவினர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இவற்றை ஆதாரத்துடன் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். திமுக ஆட்சியில் தவிர்க்க முடியாதவை ரவுடி ராஜ்ஜியம், மின்வெட்டு. அவற்றை இந்த ஆட்சியிலும் காண முடிகிறது’ என்று பேசினார்.