கஜா புயலால் பாதித்த குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு!
முகாமில் தங்கியிருந்த குடும்பங்கள், மீனவ குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.5000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கஜா புயலின் தாக்கத்தால் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாயிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் மக்கள் அடைந்த துயரம் வரலாறு காணாத சோகம்.
இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கான மரங்கள், ஆடு மாடு கோழி என பல பல்லுயிர்களை பலிவாங்கியுள்ளது இந்த புயல். பல ஆயிரம் வீடுகள் உடைந்து சேதமடைந்துள்ளன. ஒவ்வொரு தெருவிலும் பல வீடுகள் முற்றிலும் சிதைந்துவிட்டன. ஒளிவிளக்கு மின் கம்பங்கள் கணக்கிலடங்காத அளவில் சாய்ந்துவிட்டன.
மரங்களெல்லாம் பிணங்களைப்போல் கிடப்பதை கண்ணுற்றால் உள்நெஞ்சு பதைபதைக்கிறது. நான்கு நாட்களாக, மக்கள் இருக்க இடமின்றியும், உடுத்த உடையின்றியும், குடிக்க நீரின்றியும் மின்சாரமில்லாத இரவுகளை கழிக்கின்றனர்; பெருந்துயரத்தோடு தத்தளிக்கின்றனர். பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு ரூ 25 லட்சம் நிதி உதவியை அறிவித்தார். நடிகர் சூர்யா குடும்பம் இதே நிவாரண நிதிக்கு ரூ 50 லட்சம் அறிவித்திருக்கும் நிலையில் புயலால் பாதித்த குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு.
மீனவ குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.5000.
முழுதும் சேதமடைந்த குடிசை வீட்டிற்கு ரு.10000.
பாதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4100.
பாத்திரங்கள் வாங்க கூடுதலாக ரூ.3800- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
முகாமில் தங்கியிருந்த குடும்பங்கள், மீனவ குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.5000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.