பதற்ற பூமியான இஸ்ரேல்.. தமிழர்கள் யாரேனும் சிக்கியுள்ளார்களா? - உதவிக்கு அழைத்திட எண்களை வெளியிட்ட தமிழக அரசு!

Israel War - Help Line Numbers for Tamilians : இஸ்ரேல் நாட்டின் மீது மீது ஹமாஸ் பாலஸ்தீன் போராளிகள் தாக்குதல் நடத்தியத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் அண்மையில் வெளியானது. மேலும் இந்த கொடூர தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இஸ்ரேலில் நடந்த மோசமான தாக்குதல் இதுவாகவும்.  

Tamilnadu government released helpline numbers to rescue tamil peoples from Israel ans

இதை தொடர்ந்து இஸ்ரேல் அரசு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஹமாஸ் பெரும் தவறை செய்துவிட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஹமாஸ் படைக்கு எதிரான போரை தொடங்கியுள்ளதாகவும், மக்களை காக்கும் இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் இஸ்ரேல் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. தங்கள் மீது தாக்குதலை நடத்திய எதிரிகள் இதுவரை இல்லாத  மிகமோசமான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில் பாலஸ்தீன் படைகள் அரங்கேற்றிய ஒரு கொடூர சம்பவம் குறித்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹமாஸ்-பாலஸ்தீனிய போராளிகள், ஒரு திறந்த டிரக்கில், இஸ்ரேலிய பெண்ணின் அரை நிர்வாண சடலத்தை எடுத்துக்கொண்டு, நகரத்தில் அணிவகுத்துச் செல்லும் கொடூரமான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் முதல் பல தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

"உங்கள் தொகுதியில் முதலமைச்சர்".. திட்ட அனுமதி வழங்கிடும் உயர்நிலைக் குழு கூட்டம் - பங்கேற்ற அமைச்சர் உதயநிதி!

இஸ்ரேல் நாடு தற்பொழுது போர் அறிவித்துள்ள நிலையில், இன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 35 இஸ்ரேல் நாட்டு படையினர் பிணைய கைதிகளாக பாலஸ்தீனிய போராளிகளால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ள நிலையில், இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை காப்பாற்ற அனைத்து விதமான நடவடிக்கைகளும் செய்யப்படும் என்று மோடி அரசு தெரிவித்துள்ளது. இந்த சூழலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், இஸ்ரேல் நாட்டில் பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு தமிழர்கள் யாரேனும் சிக்கியிருந்தால் அவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. 

மேலும் இஸ்ரேல் நாட்டில் தங்கியுள்ள தமிழர்கள் உதவிக்காக தமிழக அரசை தொடர்புகொள்ள சில உதவி எண்களும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள தமிழர்கள் +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 ஆகிய எண்களில் அதிகாரிகளை தொடர்புகொண்டு உதவி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாலஸ்தீன போராளிகளின் அட்டூழியம்.. அரை நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட இஸ்ரேலிய பெண்ணின் உடல் - கொடுமையின் உச்சம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios