பாலஸ்தீன போராளிகளின் அட்டூழியம்.. அரை நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட இஸ்ரேலிய பெண்ணின் உடல் - கொடுமையின் உச்சம்
பாலஸ்தீனை சேர்ந்த ஆயுதக் குழுவான ஹமாஸ் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல்கள் நடத்திவருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டை நோக்கி, பாலஸ்தீன் போராளிகள் நடத்திய ராக்கெட்கள் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் பாலஸ்தீன் படைகள் அரங்கேற்றிய ஒரு கொடூர சம்பவம் குறித்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹமாஸ்-பாலஸ்தீனிய போராளிகள், ஒரு திறந்த டிரக்கில், இஸ்ரேலிய பெண்ணின் அரை நிர்வாண சடலத்தை எடுத்துக்கொண்டு, நகரத்தில் அணிவகுத்துச் செல்லும் கொடூரமான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலைத் தாக்கிய பிறகு, அங்குள்ள மக்களை பிணைக் கைதிகளாகக் கொண்டுசெல்வதாக கூறப்படுகிறது. அதே போல இறந்த பொதுமக்களின் உடல்களை டிரக்களில் நகரம் முழுவதும் ஊர்வலாமாக எடுத்து செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்த கொடுமைகள் குறித்த பல வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் கடும் மோதல் : ” இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்கும்..” பிரதமர் மோடி ட்வீட்
வெளியான அந்த வீடியோவில் பாலஸ்தீனிய போராளிகள், அரை நிர்வாணமாக, கைகளும் கால்களும் உடைந்த நிலையில் உள்ள ஒரு பெண்ணின் உடலை, ஒரு ட்ராக்கிங் பின்புறம் ஏற்றிக்கொண்டு நகர்வலம் செல்லும் கொடூர காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சிலர் இறந்த அந்த பெண்ணின் உடலின் மீது எச்சில் துப்புவதையும், அந்த இறந்த பெண்ணின் உடலை அரைவதையும் பார்க்க முடிகின்றது. இது உலகெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நெஞ்சை உலுக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இஸ்ரேல் நாடு தற்பொழுது போர் அறிவித்துள்ள நிலையில், இன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 35 இஸ்ரேல் நாட்டு படையினர் பிணைய கைதிகளாக பாலஸ்தீனிய போராளிகளால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இளகிய மனம் படைத்தோர் கீழே உள்ள இந்த பதிவை பார்க்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ள நிலையில், இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றும். இருப்பினும் நடந்த இந்த தாக்குதலை பார்க்கும்பொழுது நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் இறந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது என்றும் இஸ்ரேல் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு இல்லாத அளவில் இந்த தாக்குதலை ஹமாஸ் பாலஸ்தீனிய போராளிகள் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று சனிக்கிழமை காலை காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது சுமார் 5000 ராக்கெட்டுகள் ஏவப்பட்டன, தாக்குதலின் போது ஒரு பெண் உயிரிழந்தாக கூறப்படுகிறது. சுமார் 60 பாலஸ்தீனிய போராளிகள், ராக்கெட் தாக்குதலை பயன்படுத்தி இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவினார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேல் தெருக்களில் புகுந்த அவர்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இஸ்ரேல், பாலஸ்தீனிய ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே மோதல்; மீண்டும் ஒரு யுத்தம்; இந்தியர்களுக்கு அறிவுரை!!