இஸ்ரேலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதி படைகள் தாக்குதல் நடத்தியத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்., நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இஸ்ரேலில் நடந்த மோசமான தாக்குதல் இதுவாகவும் காசா பகுதியில் ஹமாஸ் படைகள் முனெப்போதும் இல்லாத வகையில், பலமுனைத் தாக்குதலை நடத்தியது. சுமார் 7000 ராக்கெட்களை ஏவி ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து இஸ்ரேல் அரசு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஹமாஸ் பெரும் தவறை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஹமாஸ் படைக்கு எதிரான போரை தொடங்கியுள்ளதாகவும், மக்களை காக்கும் இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் இஸ்ரேல் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. தங்கள் மீது தாக்குதலை நடத்திய எதிரிகள் இதுவரை இல்லாத மிகமோசமான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருவதால் காசா பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் குண்டுமழை பொழிவதால் மக்கள் பதுங்கும் குழிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இஸ்ரேல், பாலஸ்தீனிய ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே மோதல்; மீண்டும் ஒரு யுத்தம்; இந்தியர்களுக்கு அறிவுரை!!
காசா பகுதியில் உள்ள மக்களுக்கு எதிராகவும், தங்கள் வழிபாட்டு தலமான அல் அக்ஸா மீது ஆதிக்கம் செலுத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் உடனான உறவை அனைத்து அரபு நாடுகளும் துண்டித்து கொள்ள வேண்டும் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இஸ்ரேலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்து கொள்வதாகவும்மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கடினமான சூழலில் இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்பதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
