ஆக.30ல் தமிழக அமைச்சரவை கூட்டம்... முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு!!
ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் போக்குவரத்து துறை கட்டணங்கள் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி !
மேலும் தொழிற்கொள்கை, புதிய விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலின் குடும்பத்திற்கு பல நூறு ஏக்கர் நிலம்.. கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடம் மாற்ற முயற்சி.. இபிஎஸ்
பருவ மழை தொடங்கும் முன்னரே, கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகாத வண்ணம் பருவ மழை முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளவும், நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து விரைவுபடுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துவார் என தெரிகிறது.