ஓட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த தமிழக முதல்வர்; மாஸ் திட்டத்தை தொடங்கி மாஸ் காட்டிய ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையில், 110-விதியின் கீழ், அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டம் #TNBreakfast தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
#TNBreakfast மாணவச் செல்வங்களே நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். காலையும், மதியமும் உணவளித்து உங்களுடைய மற்ற தேவைகளை நிறைவேற்ற நான் இருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காலை சிற்றுண்டித் திட்டம்
தமிழக சட்டப்பேரவையில், 110-விதியின் கீழ், அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டம் #TNBreakfast தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, சில மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணைகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த தினத்தையொட்டி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை #TNBreakfast முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறினார். பின்னர், மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் சிற்றுண்டி சாப்பிட்டார். அப்போது அவருக்கு அருகில் இருந்த மாணவர்களுக்கு உணவை ஊட்டி மகிழ்ந்தார். தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக, 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ மாணவிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் உணவு வழங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க;- முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் காலை உணவுத் திட்டம்;முதல்வர் முக ஸ்டாலின் கனவுத் திட்டம் நிறைவேறியது
பசியின்றி கல்வி கற்றல்
பின்னர், மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்;- என் வாழ்வின் பொன்னாளாக இந்த நாள் அமைந்துள்ளது. பசித்தோறுக்கு உணவு அளிக்கும் கருணை வடிவமான திட்டம் தான் இத்திட்டம். தமிழ்நாடு இந்தாண்டு வரலாறு காணாத அளவு நெல் மற்றும் தானிய உற்பத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. மறுபுறம், யாரும் பசியால் வாடிவிடக்கூடாது என்பதற்காக நெல்பேட்டை சமையற்கூடத்தில் தயார் செய்யப்பட்ட உணவு பிஞ்சுக்குழந்தைகளுக்கு செல்கின்றது. இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை அறிந்து, ஆதிமூலத்திலே தீர்வு காண வேண்டும். அந்த முயற்சியில் ஒரு பகுதியாகவே இந்த ஆதிமூலம் பள்ளியில் காலை உணவுத்திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
அண்ணாவின் பிறந்தநாளில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தது பெருமை அளிக்கிறது. ஆயிரம் விளக்கு பகுதியில் தொடங்கிய இது போன்ற திட்டம் நூற்றாண்டு முடிந்து தூங்கா நகரில் விரிவடைந்துள்ளது. பள்ளி காலை உணவு வழங்குவதால் கற்றல் மேம்பாடு, பள்ளிக்கு வருகை ஆகியவை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலை உணவுகளை மாணவர்கள் உண்ணும்போது மனம் நிறைந்தது. இதயம் மகிழ்ச்சியில் திளைத்தது, சுயமரியாதை சமூக நீதி கோட்பாடு உருவாக்கப்பட்டது. பெரியார், அண்ணா, கலைஞரின் கனவுகளை நிறைவேற்றி வருகிறேன். மணிமேகலையின் அமுத சுரபி போல இந்த ஆட்சியை பயன்படுத்தி பணியாற்றி வருகிறோம். தமிழக மக்கள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக இத்திட்டத்தை தொடங்கவைத்துள்ளேன்
ஆங்கிலேய அரசால் மதிய உணவுத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. 1971ம் ஆண்டு காமராஜர் மதிய உணவுத்திட்டத்தை தொடங்கிய பின்னர் திமுக தொடர்ந்து நிறைவேற்றியது. குழந்தைகளுக்கும் பேபி ரொட்டியை குழந்தைகளுக்கு வழங்கியவர் கருணாநிதி. அதிக மையங்களை உருவாக்கி கூடுதல் நிதியை ஒதுக்கியவர் எம்.ஜி.ஆர். எம்.ஜிஆரின் சத்துணவுத்திட்டத்தை கலைஞர் ஆட்சியில் முடக்குவதாக கூறிய நிலையில் முட்டை, பயிறு உள்ளிட்ட சத்தாண சத்துணவுகளை வழங்கி திட்டத்தை மேம்படுத்தியவர். ஜெயலலிதா மதிய உணவை கலவை சாதமாக வழங்க உத்தரவிட்டார்.
அறிவாற்றல் வளர்ச்சி
சென்னையில் ஆய்வின் போது மாணவர்களை சந்தித்து கேட்டபோது ஏராளமான குழந்தைகள் பசியோடு காலையில் பள்ளிக்கு வருவதை உணர்ந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். #TNBreakfast பசிபிணி நீங்கினால் மாணவர்கள் மகிழ்ச்சியோடு வருவார்கள் இதனால் கல்வி மேம்படும், இதற்கான நிதியை செலவாக நினைக்கவில்லை, இத்திட்டத்தில் பயன்பெறும். இத்திட்டத்தை ஆட்சியின் முகமாக பார்க்கிறேன் இந்த ஆட்சியை கருணையின் வடிவமாக அமையும்.
இதையும் படிங்க;- நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.. உங்கள் தேவைகளை நிறைவேற்ற நான் இருக்கிறேன்.. முதல்வர் ஸ்டாலின்
தாயுள்ளத்தோடு இத்திட்டத்தை பின்பற்ற வேண்டும். ஆசிரியர்கள் பணியாளர்கள், உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வழங்குவது போல பாசத்தோடு உணவுகளை வழங்குங்கள். கல்வி போராடி பெற்ற உரிமை கல்வி உங்களிடம் இருந்து பறிக்க முடியாத சொத்து என நன்கு படிக்க வேண்டும். நன்கு படியுங்கள், படிக்காமல் முன்னேறலாம் என்று கூறுபவர்களை முட்டாள் என கூறுங்கள். நீங்கள் படியுங்கள் நான் இருக்கிறேன். படிப்பு ஒன்றுதான் நம்மிடமிருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்தாக அமைந்திருக்கிறது. அத்தகைய சொத்தை உங்களுக்கு நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள். பசிப்பிணி போக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த காலை சிற்றுண்டி திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றது. தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் #TNBreakfast இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.