திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயிலில் ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது என்றும் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்ற்னார்.

இந்த சூழலில் ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களுக்கு கோயில் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் மோதலாக மாறியதில் கோவில் காவல் பணிக்கு நியமிக்கப்ப்டவர்கள் பக்தர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த பக்தர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவரின் X வலைதள பதிவில் “ இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை. 42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் இருந்து திரும்பியவுடன் திருச்சி ரங்கநாத சுவாமியை வழிபட விரும்பினர்.

Scroll to load tweet…

ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதால் கோயில் வளாகத்திற்குள் இரத்தக்களரி ஏற்பட்டது. இந்துசமய அறநிலையத் துறையின் திமிரும் இந்த சம்பவத்திற்கு காரணமாகும். எனவே கோவில் நிர்வாகத்தில் இருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும். ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலின் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக இந்துசமய அறநிலையத்துறைக்கு எதிராக திருச்சி மாவட்டப் பிரிவினர் இன்று கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்த உள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த 34 பக்தர்கள் கோயில் உண்டியலை மிகுந்த ஓசையுடன் அடித்ததாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்பிய கோயில் பணியாளர்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது. திருக்கோயில் பணியாளரை தலைமுடியை பிடித்து உண்டியலில் மோத செய்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற பக்தர்களையும் தரிசனம் செய்ய விடாமல் இடையூறு செய்த ஆந்திர பக்தர்கள் மீது உடனடியாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டதாகவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.