தமிழுக்கு மரியாதை! பென்ஷன் தொகையை உயர்த்தும் தமிழக அரசு! யாருக்கு தெரியுமா?
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அடுத்த ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அடுத்த ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.72,000 க்குள் ஆண்டு வருவாய் கொண்ட 58 வயதைக் கடந்த தமிழ் அறிஞர்கள் இந்த திட்டத்தில் பலன் அடையலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதளத்தில் டவுன்லோட் செய்யலாம். வருமானச் சான்று, ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கான சான்றுகள் மற்றும் இரண்டு மூத்த தமிழறிஞர்களின் தகுதிநிலை சான்று ஆகியவற்றை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தாசில்தார் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழக அரசு சார்பில் ஆறுபடை வீடு இலவச சுற்றுலா! பக்தி பரவசத்தில் முருக பக்தர்கள்!!
இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,500 உதவித்தொகை, ரூ. 500 மருத்துவப்படி வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
இந்நிலையில், 2022-2023ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் தேர்வுசெய்யப்பட்ட 100 பேருக்கு தமிழறிஞர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு, உதவித்தொகை ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், "அடுத்த வருடம் இந்த உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். எல்லை காவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் மரணம் அடையும்போது அவர்களின் ஈம செலவுக்கென ரூ.5,000 வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தத் தொகையும் உயர்த்தப்படும். வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கும் இந்தத் தொகை வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.
இந்த மாதிரி பெயர் இருந்தால் பாஸ்போர்ட் கிடைக்காது! குழந்தைக்கு பேர் வைக்கும்போது இதை யோசிங்க!