Asianet News TamilAsianet News Tamil

தமிழ் புதல்வன் திட்டம் 2024 : மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Tamil Pudhalvan Scheme 2024: Apply Online for Rs1000, Eligibility Check Rya
Author
First Published Aug 12, 2024, 10:26 AM IST | Last Updated Aug 12, 2024, 10:26 AM IST

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கல்வித்துறையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசுப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி படிக்க மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த திட்டம் மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழ் புதல்வன் திட்டம் 2024

அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மற்றும் அரசு உதவிப் பெறும் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

இன்று மாநகராட்சிகளாக தரம் உயரும் 4 நகராட்சிகள் எது தெரியுமா.? புதிய திட்டங்களோடு தொடங்கி வைக்கும் ஸ்டாலின்

அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியை தொடர உதவும் நோக்கில், இந்த திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, அரசு பள்ளியில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 12ம் வகுப்பை முடித்து கல்லூரியில் தொடர்ந்து படிக்கும் 3.28 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். தமிழ் புதல்வன் திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ.1000 உதவித்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.  

தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • ரேஷன் கார்டு
  • மொபைல் எண்
  • மின்சார பில்
  • முகவரி
  • ஆதார் கார்டு
  • பான் கார்டு

தமிழ் புதல்வன் திட்டம் : தகுதி

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டின் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மாணவர்களாக இருக்க வேண்டும். 8 அல்லது 10-ம் வகுப்பு வரை பயின்று தொழில்கல்வி கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும்.

TN GOVT : அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த முடிவா.? இது உண்மையா.? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

எப்படி விண்ணப்பிப்பது:

  • மாணவர்கள் தங்கள் பள்ளிகள் அல்லது நிறுவனங்கள் மூலம் தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க: அதிகாரப்பூர்வ தமிழ்ப் புதல்வன் திட்ட இணையதளத்தைப் பார்வையிடவும்.
  • முகப்புத் திரையில், "இங்கே விண்ணப்பிக்கவும்" விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
  • ஒரு புதிய பக்கம் திறக்கும்; தேவையான அனைத்து விவரங்களையும் துல்லியமாக உள்ளிடவும். தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • "சமர்ப்பி" என்ற பட்டனை கிளிக் செய்யவும். 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios