10:38 PM (IST) Aug 05

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் திருப்பம்... புதிய நீதிபதி நியமனம்!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க

10:26 PM (IST) Aug 05

அதிமுக வழக்கில் திருப்பம்.. புதிய நீதிபதி நியமனம் !!

அதிமுக பொதுக்குழு வழக்குகளை விசாரிக்க புதிய நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

06:47 PM (IST) Aug 05

பிரதமர் மோடியை திடீரென சந்தித்த மம்தா

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

06:46 PM (IST) Aug 05

ஆகஸ்ட் 10 - பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க

06:45 PM (IST) Aug 05

டிஎஸ்பி ஆன டீக்கடைக்காரர் மகள் - குவியும் பாராட்டுக்கள் !

அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் இருந்து படிப்பை மூலதனமாக கொண்டு டிஎஸ்பி ஆக உயர்ந்திருக்கிறார் டீக்கடைக்காரர் மகள்.

மேலும் படிக்க

06:44 PM (IST) Aug 05

நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஓபிஎஸ் தரப்பு !

 உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கேட்டுள்ளனர்.

மேலும் படிக்க

03:31 PM (IST) Aug 05

உஷார் !! நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை.. 6 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

03:30 PM (IST) Aug 05

விடாது வெளுக்கும் கனமழை.. ஆறுகளில் காட்டாற்று வெள்ளம்.. நிரம்பிய முக்கிய அணைகள்.. தற்போதைய அப்டேட்..

பவானிசாகர் அணை 102 அடியை எட்டியதால், அணையிலிருந்து வினாடிக்கு 7,350 கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால், கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

03:28 PM (IST) Aug 05

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஆதி திராவிடர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளராக டி.எஸ்.ஜவஹர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளராக மங்கத் ராம் சர்மா, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளராக மணிவாசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

03:03 PM (IST) Aug 05

ஜெயம் ரவி உடன் ரொமான்ஸ் பண்ண ரெடியான பிரியங்கா மோகன் - அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

தமிழில் இதுவரை இவர் நடிப்பில் ரிலீஸான 3 படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளன. இதனால் பிரியங்கா மோகனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வரும் பிரியங்கா, தற்போது மேலும் ஒரு தமிழ் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார்.மேலும் படிக்க

02:26 PM (IST) Aug 05

மீண்டும் நிர்வாணமாக நடிக்க ரன்வீர் சிங்குக்கு பிரபல நிறுவனம் அழைப்பு

நடிகர் ரன்வீர் சிங்கை மீண்டும் நிர்வாணமாக நடிக்க பீட்டா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அமைப்பின் விளம்பரத்திற்காக நிர்வாணமாக நடிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதனை ஏற்று ரன்வீர் சிங் மீண்டும் பிறந்தமேனிக்கு நிர்வாணமாக நடிப்பாரா அல்லது மறுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பீட்டா என்பது விலங்கு வதைகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கு சில ஆண்டுகள் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டதற்கும் இந்த அமைப்பு தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

01:58 PM (IST) Aug 05

இந்திய டிரம்ஸ் கலைஞரின் வீடியோவை உலகளவில் வைரலாக்கிய ஜஸ்டின் ஃபீபர்

வட மாநிலத்தில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் இசைக் கலைஞர் ஒருவர் டிரம்ஸ் வாசித்த வீடியோ ஒன்று கடந்த மாதம் 6-ந் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவில் வைரல ஆகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பிரபல பாப் இசைக் கலைஞர் ஜஸ்டின் ஃபீபர் தான்.மேலும் படிக்க

01:13 PM (IST) Aug 05

5ஜியை தொட்ட நீ கெட்ட.. தூள்ளி குதித்து வந்து 2ஜி வழக்கை தூசு தட்டிய சிபிஐ.. ஆ.ராசவுக்கு எதிராக முறையீடு

5ஜி அலைக்கற்றையில் ஏலத்தில் முறைகேடு நடைபெற்றதாக ஆ.ராசா புகார் கூறிய நிலையில், 2ஜி வழக்கை தினந்தோறும் விசாரிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டுள்ளது.

மேலும் படிக்க...

12:07 PM (IST) Aug 05

கடலுக்கடியில் பேனர் வைத்து அதகளம் செய்த அஜித் ரசிகர்கள் - வைரல் வீடியோ

நடிகர் அஜித், சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி கடலுக்கடியில் 100 அடி ஆளத்தில் நடிகர் அஜித்தின் பேனரை வைத்து கெத்து காட்டி உள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

11:50 AM (IST) Aug 05

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் மோடி கபடி லீக் விளையாட்டு போட்டி.. பரிசுத்தொகை 35 லட்சம்

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் மோடி கபடி லீக் விளையாட்டு போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகை 35 லட்சம் என அமர்பிரசாத்ரெட்டி தெரிவித்துள்ளார். 

11:37 AM (IST) Aug 05

வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை

வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

11:15 AM (IST) Aug 05

மக்களே உஷார்.. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக உருவாகுமா..? வானிலை மையம் அறிவிப்பு..

வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

10:23 AM (IST) Aug 05

மோடியின் கோரிக்கையை ஏற்ற எடப்பாடி பழனிசாமி...! அதிமுக தொண்டர்களுக்கு திடீர் உத்தரவிட்ட இபிஎஸ்

சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசிய கொடி பறக்க விட வேண்டும் என பிரதமர் மோடி விடுத்த அழைப்பினை ஏற்று அனைவரின் வீடுகளுக்கு முன்பும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க...

10:21 AM (IST) Aug 05

கியூட் நுழைவுத்தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ரத்து - தேசிய தேர்வு முகமை

மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் CUET எனும் நுழைவுத்தேர்வை இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் CUET யின் 2ம் கட்ட நுழைவுத்தேர்வு நேற்று (ஆகஸ்ட் 4) தொடங்கியது. இந்நிலையில் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் 2வது ஷிப்ட்டில் நடைபெற இருந்த தேர்வு அனைத்து மையங்களிலும் ரத்து செய்யப்பட்டதாகவும், மாற்றுதேதியில் தேர்வு நடத்தப்படுமென்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

10:15 AM (IST) Aug 05

பிரைட் ரைசில் புழு... சென்னையில் பிரபல உணவகத்திற்கு ஆப்பு

சென்னையில் உள்ள பர்வீன் ஃபாஸ்ட் புட் கடையில் சாப்பிட்ட பீப் பிரைட் ரைஸில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மேலும் படிக்க