Weatherman Update : புயலுக்கு முன் அமைதி! இன்றும் நாளையும் மழை இருக்குமா.? வெதர்மேன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்
வங்க கடலில் புயல் உருவாகவுள்ள நிலையில் இன்றும் நாளையும் மழை அதிகளவு இல்லாமல் அமைதியாக இருக்கும் என தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் புயல் எந்த பகுதியில் கரையை கடக்கும் என இன்று டிராக்கிங் செய்து முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.
வங்க கடலில் உருவாகும் புயல்
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக வங்க கடலில் புதிய புயல் உருவாகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (30-11-2023) காலை 08.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 03-12-2023 வாக்கில் புயலாக வலுப்பெற கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 அதிகாலை வாக்கில் வடதமிழகம்- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் மழை நிலவரம் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புயலுக்கு முன் அமைதி என்பது போல இன்று காலை முதல் நாளை வரை அமைதி காணப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னையில் அலுவலக நேரத்தில் மழை பெய்யும்.
இந்த புயல் சின்னம் எங்கே செல்லும் என்பதற்கான டிராக்கிங் இன்று முடிவு செய்யப்படும். எல்லா வானிலை மாடல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கின்றன என கூறியுள்ளார். அதன்பின் பெரும்பாலும் மழை இருக்காது. இன்று வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாவதால் பெரும்பாலும் மழை இருக்காது, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்