காலாண்டு விடுமுறையில் அதிரடி மாற்றம்.. எல்லையில்லா மகிழ்ச்சியில் மாணவர்கள் - முழு விவரம்!
Quarterly Exam Holiday : தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது குறித்த முக்கிய தகவலை பின்வருமாறு காணலாம்.
தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடந்து வரும் நிலையில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நாட்கள் நீடிக்கப்பட்டுள்தாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்படி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் வருகின்ற அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் 9ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பந்த் எதிரொலி: சென்னை – பெங்களூரு பேருந்துகள் இன்றிரவு 8 மணி முதல் நிறுத்தம்!