காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழ்நாடு வீராங்கனை தனலெட்சுமி நீக்கப்பட்டுள்ளார். ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதால் தடகள வீராங்கனை தனலெட்சுமி நீக்கப்பட்டுள்ளார்.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், இந்த முறை இங்கிலாந்தின் பிர்மிங்கமில் காமன்வெல்த் போட்டிகள் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகின்றன.இந்நிலையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 36 பேர் அடங்கிய இந்தியத் தடகள அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க:நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கிடுவோம்.. அமைச்சர் மா.சுப்ரமணியன் மீண்டும் உறுதி
தமிழகத்தை சேர்ந்த 24 வயது தடகள வீராங்கனை தனலெட்சுமி, 100 மீ மற்றும் 4*100 மீ தொடர் ஓட்டங்களில் தேர்வாகியிருந்தார்.இந்நிலையில் ஊக்க மருந்து சோதனையில் வீராங்கனை தனலெட்சுமி தோல்வியடைந்துள்ளார். மேலும் அவர் காமன்வெல்த் போட்டிகளுக்குச் செல்லும் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க:அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும்...! நீதிமன்ற உத்தரவால் ஓபிஎஸ் ஷாக்
அதேபோல மும்முறை தாண்டுதலில் தேசிய சாதனையை முறியடித்த கர்நாடகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாபுவும், ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனிடையே கடந்த வருடம் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் 4*400 கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணிக்காகத் தமிழக வீராங்கனை தன்லெட்சுமி தேர்வாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
