நீட் விலக்கு தொடர்பாக மத்திய அரசின் 2 துறைகள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதிலளிக்க தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 18 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு, கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்தது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

மருத்துவப் படிப்புகளில் 2022-23ம் கல்வியாண்டுக்கான சேருவதற்கான நீட் தேர்வுக்கு, நாடு முழுவதும் 10 லட்சத்து 64 ஆயிரத்து 606 மாணவிகள், 8 லட்சத்து 7 ஆயிரத்து 711 மாணவர்கள், 12 திருநங்கைகள் என மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நாடு முழுவதும் மொத்தம் 497 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடந்தது.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி சிசிடிவி வீடியோ உண்மை இல்லை.! இதுலயும் லேட்டா ? காவல்துறையை வறுத்தெடுக்கும் மக்கள்
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அப்போது பேசிய அவர், ‘ நீட் விலக்கு மசோதாவை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். கவர்னர் வழியாக தமிழக சட்டத்துறைக்கு மத்திய அரசு அனுப்பிய குறிப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. நீட் தேர்வு தகுதியின் அடிப்படையிலான தேர்வு என்று மத்திய அரசு அனுப்பிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசியக் கல்விக் கொள்கைக்கு முரணாக உள்ளதா என மத்திய அரசு அனுப்பிய குறிப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நீட் விலக்கு தொடர்பாக மத்திய அரசின் 2 துறைகள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதிலளிக்க தயாராக உள்ளோம். மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு அனுப்பப்படும். நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்கப்படும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே அரசின் இலக்கு. சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் தயாரான பதிலுக்கு முதல்வரிடம் ஓரிரு நாளில் ஒப்புதல் பெறுவோம்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..எங்க பொண்ணோட கையெழுத்து இல்லை.. ஸ்ரீமதி பெற்றோர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்
