இப்பவே வாட்டி வதைக்கும் வெயில்... ஆறுதல் அளிக்க வரும் லேசான மழை!
இன்று முதல் வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை தமிழகத்தில் அனேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
தென் இந்தியாப் பகுதியில் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் வெயில் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே செல்ல வாய்ப்பு அதிகம் இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நம்பர்களில் இருந்து போன் கால் வந்தா அலர்ட்டா இருங்க... எச்சரிக்கும் மத்திய அரசு!
இன்று முதல் வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை தமிழகத்தில் அனேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அசவுகரியமான வானிலை நிலவக்கூடும்.
அடுத்த 48 மணிநேரத்தைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்! ஓநாய் குழுவுக்குப் போட்ட உத்தரவு!