Tamil Nadu Governor Vidyasagar Rao arrived in Chennai

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை வந்தடைந்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார்.

எம்.எல்.ஏ. சரவணன் தொடர்பான வீடியோ விவகாரம் குறித்து, ஆளுநரிடம் முறையிடப் போவதாக திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை வந்தவுடன், ஆளுநர் மாளிகைக்கு சென்று மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தது.

வீடியோ விவகாரம் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், எம்எல்ஏ சரவணன் தொடர்பான வீடியோ விவகாரம் குறித்து நேற்றே நேரமில்லாத நேரத்தில் பேச அனுமதி கேட்டாம். ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும் எங்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.

இன்றும் சட்டப்பேரவையில் எம்எல்ஏ சரவணனின் வீடியோ விவகாரம் குறித்து பேச அனுமதி கோரினாம். ஆனால் இன்றும் சபாநாயகர் அனுமதி மறுத்தார். இந்த விவகாரம் குறித்து பேச ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்த நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று மாலை மும்பையில் இருந்து சென்னை வந்தார். ஆளுநரை மு.க.ஸ்டாலின் இன்று மாலை சுமார் 6 மணியளவில் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.