தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் 2 நாட்களுக்கு அடைப்பு..! மது பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் 4,800 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் மூலம் வரும் வருமானம் தமிழகத்தின் முக்கிய திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருந்து வருகிறது. திருவிழா மற்றும் முக்கிய விழா நாட்களில் நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்டும் துறையாக டாஸ்மாக் உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை இயங்குகிறது. இந்தநிலையில் மது பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மது பிரியர்கள் அதிர்ச்சி
அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டில் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2ம் ஆகிய இரு தினங்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28ம் தேதி இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான மிலாடி நபி கொண்டாடப்படவுள்ளது. இதேபோல் காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே இந்த இரண்டு நாட்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் இந்நாட்களில் மூட வேண்டும் அரசு என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படியுங்கள்
4 நாட்களாக தேடப்பட்ட 2 வயது குழந்தை ஸ்பீக்கர் பெட்டியில் சடலமாக மீட்பு; உறவினர்கள் கதறல்