Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..! சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக சங்கர் நியமனம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்றதையடுத்து புதிய ஏடிஜிபியாக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

Tamil Nadu government order to transfer 9 IPS officers
Author
First Published Nov 30, 2022, 3:58 PM IST

ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை கூடுதல் செயலாளர் பனீர்நர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்ற நிலையில் புதிய சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  கமாண்டோ படை ஏடிஜிபி இருந்த ஜெயராம், ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமையிட ஏடிஜிபியாக செயல்பட்டு வந்த வெங்கடராமன் கூடுதலாக நிர்வாக பிரிவை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் தகுதியற்றவர்களுக்கு கலைமாமணி.? விருதுகள் ரத்து செய்யப்படும்.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Tamil Nadu government order to transfer 9 IPS officers

சைலேந்திர பாபுவிற்கு கூடுதல் பொறுப்பு

மேலும் போலீஸ் பயிற்சி அகாடமியின் டிஜிபி பதவியை காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூடுதலாக கனிப்பார் என்றும்  கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் மதிவாணன், போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  கோவை போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அசோக் குமார், சென்னை சைபர்கிரைம் பிரிவிற்கும், நாகை கடலோர காவல்படை கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமார், தமிழ்நாடு கமாண்டோ படைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு கமாண்டோ படை கண்காணிப்பாளராக இருந்த ராமர், நாகை கடலோர காவல்படை கண்காணிப்பாளராக  மாற்றப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர், திருவுருவச்சிலை..! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios