செலவை குறைக்க சூப்பர் சான்ஸ்.! தொழில் முனைவோருக்கு ஒரே ஒரு நாள் பயிற்சி- வெளியான அரசின் அறிவிப்பு

தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு ChatGPT பயன்பாட்டில் தமிழக அரசு பயிற்சி அளிக்கிறது. ChatGPT மூலம் வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் இந்த பயிற்சி உதவும்.

Tamil Nadu Government Notification Regarding ChatGPT Training Course for Entrepreneurs KAK

ChatGPT பயிற்சி

நவீன காலத்தில் தொழில் நுட்ப மாற்றங்கள் காரணமாக கடின வேலைகளும் எளிதாக மாறிவிட்டது. அந்த வகையில் சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள், தொழில்முனைவோர்களுக்கு உதவிடும் வகையில் ChatGPT முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் 2 மாதங்களில் 10 கோடி பேரிடம் ChatGPT சென்று சேர்ந்துள்ளது. அந்த வகையில் தொழில்முனைவோர்களுக்கு உதவிடும் வகையில் பயிற்சி வகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் படி தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை இந்த பயிற்சி வகுப்பு வழங்கும்.

Tamil Nadu Government Notification Regarding ChatGPT Training Course for Entrepreneurs KAK

பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள்:

ChatGPT அறிமுகம் மற்றும் ப்ராம்ப்ட் நுணுக்கங்கள்: ChatGPT-இன் திறன்கள் மற்றும் வணிக தேவைகளுக்கேற்ப பொருத்தமான ப்ராம்பட்டுகளை எழுதும் திறன்களை கற்றுக்கொள்ளுங்கள்.

தெளிவான இலக்கு நிர்ணயம்: 

ChatGPT-இன் உதவியுடன் உங்கள் நோக்கம் மற்றும் இலக்குகளை சரியான வழியில் அமைக்கவும், செயல்படுத்தவும் கற்றுக்கொள்ளுங்கள். மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் யுக்திகள்: ChatGPT-ஐ பயன்படுத்தி மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடக கற்றுக்கொள்ளுங்கள். கான்டென்ட் உருவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் ஈர்ப்பு: தாக்கம் செய்கிற கான்டென்ட் உருவாக்கவும், வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்தவும் AI கருவிகளை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். செயல்திறன் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு உத்திகள்: வணிக செயல்திறனை துல்லியமாக கண்காணிக்கவும், ChatGPT-ஐ பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள்.

Tamil Nadu Government Notification Regarding ChatGPT Training Course for Entrepreneurs KAK

பயிற்சி முகாம் அறிவிப்பு

நேரடி சிக்கல் தீர்வு: இடுகையாளர் எதிர்கொள்ளும் தொழில்முனைப்பு சவால்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமர்வில், ChatGPT மூலம் தீர்வுகளை கண்டுபிடிக்கவும். பங்கேற்பாளர்கள் 100-க்கு மேற்பட்ட செயல்திறன் கொண்ட ChatGPT ப்ராம்ப்ட்டுகளுடன் ஒரு பிரத்யேக மின்புத்தகத்தையும், அன்றாட ப்ராம்ப்ட் வழிகாட்டுதல்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கான ஒற்றுமையான வாட்ஸ்அப் சமூக அணுகலையும் பெறுவார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 90806 09808/ 98416 93060 / 96771 52265/

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios