79-வது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி, தகைசால் தமிழர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வழங்குகிறார். பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்டோர் விருதுகள் பெறுகின்றனர்.

79-வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படவுள்ளது.. அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ள விருதுகள் பட்டியல்

தகைசால் தமிழர் விருது - பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது -

முனைவர் நாராயணன், செயலாளர் விண்வெளித் துறை & தலைவர். விண்வெளி ஆணையர் & தலைவர், இந்திய விண்வெளி ஆய்வு மையம்.

துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது - செல்வி, துளசிமதி முருகேசன், காஞ்சிபுரம் மாவட்டம்.

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது

சமுதாய பங்கேற்பு மூலம் மாற்றத்தைக் கொண்டுவரும் ஊரக மேம்பாட்டு முயற்சிகள்

காவல் மருத்துவர் வி. பிரசண்ண குமார், உதவி கண்காணிப்பாளர்.

ப. பாலகிருஷ்ணன், வட்டாட்சியர்.

யமுனா, வட்டார வளர்ச்சி அலுவலர்

கட்டிட வரைபட அனுமதிகளை எளிதாக்கியது

காகர்லா உஷா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை

பழங்குடியினர் திராவிடர் மற்றும் நலத் திட்டங்களை செயல்படுத்தியதற்கான விருது

லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

ஆனந்த், ஆணையர்,

ஆதிதிராவிடர் நலத்துறை

அண்ணாதுரை, இயக்குநர், பழங்குடியினர் நலத்துறை

கந்தசாமி, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்

கண்ணாடிப் பாலம்

மருத்துவர், செல்வராஜ், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்

அழகுமீனா, மாவட்ட ஆட்சியர், கன்னியாகுமரி

தமிழ் மொழியின் உலகளாவிய மேம்பாடு

கோமகன், இணை இயக்குநர், தமிழ் இணையக் கல்வி கழகம்.

சிறந்த மாநகராட்சி

ஆவடி

நாமக்கல்

சிறந்த நகராட்சி

ராஜபாளையம்

ராமேஸ்வரம்

பெரம்பலூர்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள்

சிறந்த மருத்துவர் - குமரவேல் சண்முகசுந்தரம் - திருச்சி

சிறந்த நிறுவனம் - எக்காம்வெல் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம், சேலம்

சமூக பணியாளர் - குணசேகரம் ஜெகதீஷன், கோவை

மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனம் - பெல் பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், விருதுநகர்

சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி - காஞ்சிபுரம்