Asianet News TamilAsianet News Tamil

திருவண்ணாமலை தீபத்திற்கு போறீங்களா?எத்தனை சிறப்பு பேருந்துகள்.? தற்காலிக பேருந்து நிலையம் எங்கே.?வெளியான தகவல்

திருவண்ணாமலை தீப திருவிழாவையொட்டி சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6947 நடைகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
 

Tamil Nadu government announcement regarding special buses on the occasion of thiruvannamalai deepam Festival KAK
Author
First Published Nov 21, 2023, 3:16 PM IST | Last Updated Nov 21, 2023, 3:16 PM IST

திருவண்ணாமலை தீபத்திருவிழா

திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறுத . மேலும் சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டுள்ள தகவலில்,  திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 26/11/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும், 

Tamil Nadu government announcement regarding special buses on the occasion of thiruvannamalai deepam Festival KAK

சிறப்பு பேருந்து அறிவிப்பு

27/11/2023 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும். 25/11/2023 சனிக்கிழமை முதல் 27/11/2023 வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி. சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6947 நடைகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது. 

Tamil Nadu government announcement regarding special buses on the occasion of thiruvannamalai deepam Festival KAK

சிறப்பு சிற்றுந்துகள் இயக்கம்

மேலும் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பக்தர்களுக்கு எவ்விதமான அசௌகரியம் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கு தகுந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்துதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தீபத்துக்கு தி.மலைக்கு போறீங்களா? கூட்ட நெரிசல் இல்லாமல் குளு குளுனு செல்ல போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios