தமிழகத்தின் உரிமைக்காவே தவிர யாருடைய காலில் விழுவதற்கும் நான் டெல்லிக்கு செல்லவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் உரிமைக்காவே தவிர யாருடைய காலில் விழுவதற்கும் நான் டெல்லிக்கு செல்லவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியிலிருந்து நேற்றிரவு சென்னை வந்த முதலமைச்சர் ஸ்டாலின், இன்று தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன் குமாரின் இல்லத் திருமணவிழாவில் கலந்துக்கொண்டார். பின்னர் பேசிய அவர்,தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு செம்மொழி என்கிற அந்தஸ்தை நமக்குப் பெற்றுத் தந்தவர் நம்முடைய கருணாநிதி என்பதை இந்த நாடு மறந்திட முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரிய நம்முடைய தமிழ்மொழியில் நடைபெற்றிருக்கும் இந்தத் திருமணத்திற்கு தலைமையேற்று, மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாடாளுமன்றத் தேர்தல், சட்டபேரவை தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தந்து நம்மைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். நடந்த முடிய நகர்ப்புற தேர்தலில் மிக பெரிய வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு மக்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று தான் அரத்தம். நிச்சயமாக - உறுதியாக கருணாநிதி வழியில் நின்று, அவர் என்னென்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்தாரோ, எதை எதை சாதித்துக் காட்டியிருக்கிறாரோ அதையெல்லாம் அவர் வழி நின்று நானும் சாதிப்பேன் என்று முதலமைச்சர் பேசினார்.
நான் அண்மையில் துபாய்க்கு சென்றிருந்த நேரத்தில், ஏதோ பல கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றதாக முன்னாள் முதல்வர் – இன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பேசிய செய்திகளையெல்லாம் நாம் பார்த்தோம். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் ஈபிஎஸ்க்கு நமது கூட்டணி கட்சி தலைவர்கள் பதிலளித்துவிட்டதால் மேலும் பேச தேவையில்லை என்றார்.
அதையடுத்து அண்மையில் மூன்று நாட்கள் இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்குப் பயணம் சென்று, மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து பிரதமர் இடத்திலும் மத்திய அமைச்சர்களை சந்திக்கு கோரிக்கை மனுக்களையும் கொடுத்துள்ளேன். இந்நிலையில் இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத சிலர் தான், நான் ஏதோ அச்சத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிற என்னை அதிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகப் போனேன் என்று சொல்லியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. பதவியேற்றபோதே நான் சொன்னேன் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்றுதான் சொல்லியிருக்கிறேன். நான் கருணாநிதியின் மகன். என்றைக்கும் தமிழ்நாட்டுக்காக உழைப்பேன் என்று தெரிவித்தார்.மேலும் என்னை விமர்சிப்பவர்களுக்கு ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன். அங்கு சென்று யாருடைய காலிலும் விழுந்து, இதை எனக்கு செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் நான் போனேனே தவிர, வேறு அல்ல என்று முதலமைச்சர் பேசினார்.
