Asianet News TamilAsianet News Tamil

தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விடுத்த கோரிக்கை.. பரீசீலிப்பாரா முதல்வர்?

தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil Nadu Cauvery Farmers Protection Association has made a request to the Chief Minister of Tamil Nadu
Author
First Published Sep 20, 2022, 9:08 PM IST

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க சார்பில் கோரிக்கை மனுவில், ‘தமிழ்நாட்டிலுள்ள சுமார் 2. 20 கோடி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்திற்கு இலவச வேட்டி மற்றும் புடவைகள் கொள்முதல் செய்திட துணி ஆலைகளிடமிருந்து ஒப்பந்தம் தொடர்பான பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாக அறிகிறேன். இத்திட்டத்திற்கான வேட்டி சேலைகளை தமிழ்நாட்டிலுள்ள துணி உற்பத்தி ஆலைகளிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டுமென்ற நல்ல கொள்கை முடிவிலிருக்கின்ற தமிழ்நாடரசினைப் பாராட்டுகிறேன். மகிழ்ச்சி. நன்றி.

அதேப்போன்று வரவிருக்கும் தமிழர் திருநாள், உழவர் திருநாள், பொங்கல் பண்டிகைக்கு, சென்ற ஆண்டைப் போன்று சுமார் 2. 20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் அரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், வெள்ளை உளுத்தம் பருப்பு, நெய், மிளகு, மிளகாய் பொடி, மல்லித்தூள், கடுகு, சீரகம், மஞ்சள் தூள், உப்பு உள்ளிட்ட 22 வகையான மளிகை பொருட்களை இவ்வாண்டும் வழங்கவுள்ள நிலையில், அப்பொருட்களனைத்தையும் தமிழகத்தில் உற்பத்தி செய்யும் உழவர்களிடமிருந்து மட்டுமே நேரடியாக, இடைத்தரகர்கள் தலையீடில்லாமல் [ COMMISSION, CORRUPTION, COLLECTION இல்லாமல்], தரமான பொருட்களாக நியாயமான விலைக்கு கொள்முதல் செய்வதன் மூலம், தமிழக உழவர்களுக்கு, நியாயமான ஓரளவு லாபகரமான விலைக் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.

Tamil Nadu Cauvery Farmers Protection Association has made a request to the Chief Minister of Tamil Nadu

மேலும் செய்திகளுக்கு..“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்

சென்ற ஆண்டு, தமிழ்நாட்டில் விளைவிக்கப்பட்ட பொங்கல் கரும்பினை கொள்முதல் செய்த பொழுது அரசியல் (வியாதி)வாதிகள், இடைத்தரகர்கள், சில ஊழல் அலுவலர்களின் ஆக்கிரமிப்பே/கையே மேலோங்கி இருந்தது. பொங்கல் செங்கரும்பு உற்பத்தியாளர்களுக்கு மிகக் குறைந்த விலையே தரப்பட்டு, கட்டாய கொள்முதல் நடந்தது. பொங்கல் செங்கரும்பை தமிழ்நாட்டிலேயே கொள்முதல் செய்த அரசு, வெல்லம் கொள்முதலை வெளி மாநிலத்திலிருந்து செய்தது. 

தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம் கணபதிஅக்ரஹாரம், ஒக்கக்குடி, வீரமாங்குடி, பெரமூர், மாகாளிபுரம், கருப்பூர், திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டி, சேலம் செவ்வாய்பேட்டை, பிலிக்கள் பாளையம், அணைக்குடி, இளங்கார்குடி மற்றும் கரூர் பகுதிகளில் உள்ள வெல்லம் உற்பத்தியாளர்களை கவலை அடையச் செய்தது மட்டுமில்லாமல், அரசே வெளி மாநிலங்களிலிருந்து வெல்லத்தினை கொள்முதல் செய்து இலவசமாக வழங்கியதால், தமிழ்நாட்டில் மேற்கண்ட ஊர்களில் உற்பத்தியான வெல்லம் முழுவதும், உற்பத்தி செலவைவிட குறைவான விலைக்கு, உழவர்கள் நட்டத்திற்கு விற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டதை மறக்க முடியவில்லை.

மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

மேலும், வெளிமாநிலத்தில் அரசு கொள்முதல் செய்து விநியோகித்த வெல்லம் மிகத்தரக்குறைவாக இருந்ததை பொதுமக்கள் அதிருப்தியுடன் வாங்கியதை இந்த ஆண்டு உணர்ந்து, வர இருக்கும் தமிழ் புத்தாண்டு, உழவர்த்திருநாள், பொங்கலுக்கு தரயிருக்கின்ற வெல்லம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உழவர்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பொருட்களுக்கும் முன்னுரிமை அளித்து தவறாமல் தமிழ்நாடு அரசு கொள்முதல் கொள்கையினை அறிவிப்பதோடு, இது குறித்த நிரந்தர அரசாணையை வெளியிட்டு, தமிழ்நாட்டில் உற்பத்தியாகாத பொருட்களை மட்டும் பிற மாநிலங்களில் கொள்முதல் செய்யும் நடைமுறையைப் பின்பற்றிட உழவர்கள் சார்பில் வலியுறுத்துகிறேன்’ என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..சூப்பர் செய்தி.! நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல் !

Follow Us:
Download App:
  • android
  • ios