03:40 PM (IST) Mar 14

சென்னை மட்டுமல்ல! 1,125 புதிய மின்சார பேருந்துகள்! பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது!

தமிழக பட்ஜெட்டில் 3,000 புதிய பேருந்துகள் மற்றும் 1,125 மின் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிண்டி மற்றும் வண்ணாரப்பேட்டையில் பன்முகப் போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்படும்.

மேலும் படிக்க
01:22 PM (IST) Mar 14

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி - அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிககளில் படிக்கும் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி அவரவர் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

12:24 PM (IST) Mar 14

அடி தூள்.! மீண்டும் சரண் விடுப்பு சலுகை ! அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி! தமிழக பட்ஜெட்டில் அதிரடி

நிதி பற்றாக்குறையால் நிறுத்தி வைக்கப்பட்ட சரணவிடுப்பு சலுகையை மீண்டும் வழங்க அரசு ஊழியர்கள் போராடி வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, 1.4.2026 முதல் 15 நாட்கள் வரை சரண் செய்து பணமாகப் பெறும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க
12:16 PM (IST) Mar 14

இனி இவர்களுக்கும் ரூ.1000! தோழி விடுதிகள் குறித்து பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

Tamil Nadu Budget: 2024-26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், மூன்றாம் பாலினத்தவருக்கு மாதம் ரூ.1000 உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க
12:11 PM (IST) Mar 14

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் திவுக் கட்டணம் 1% குறைவு

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால் பதிவுக் கட்டணம் 1% குறைக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

12:02 PM (IST) Mar 14

அரசு துறைகளில் உள்ள 40,000 காலிப்பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும்

அரசு துறைகளில் உள்ள 40,000 காலிப்பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும். கடந்த 4 ஆண்டுகளில் 78,882 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். 

12:00 PM (IST) Mar 14

பெற்றோரை இழந்த 50,000 குழந்தைகளுக்கு உதவித்தொகை

பெற்றோரை இழந்த 50,000 குழந்தைகளுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:59 AM (IST) Mar 14

இலங்கை தமிழர்களுக்கு 3000 வீடுகள் வரும் நிதியாண்டில் கட்டப்படும்

பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் ரூ.75 கோடியில் செயல்படுத்தப்படும். முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு 3000 வீடுகள் வரும் நிதியாண்டில் கட்டப்படும். இந்த ஆண்டில் 5 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும்

11:45 AM (IST) Mar 14

சென்னையில் இத்தனை இடங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களா.? பட்டஜெட் முக்கிய அறிவிப்புகள்

தமிழக பட்ஜெட்டில் குறு, சிறு தொழில் கடன் உதவி, கடற்கரை மேம்பாடு, பசுமை பேருந்துகள், மெட்ரோ விரிவாக்கம், கைவினைஞர்களுக்கு உதவி, குடிநீர் திட்டம், ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர் உட்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க
11:43 AM (IST) Mar 14

மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள்

Scroll to load tweet…

11:33 AM (IST) Mar 14

ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா

ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும். அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும்

11:32 AM (IST) Mar 14

3000 புதிய பேருந்துகள் கொள்முதல்

500 கிமீ தூர வனப்பகுதி சாலைகள் 250 கோடி செலவில் மேம்படுத்தப்படும். போக்குவரத்து துறைக்கு 1031 கோடி ரூபாய் செலவில் புதியதாக 3000 பேருந்துகள் வாங்கப்படும்.

11:29 AM (IST) Mar 14

மாணவியருக்கு மாணவியர் விடுதிகள்

Scroll to load tweet…

11:28 AM (IST) Mar 14

தமிழ்நாட்டில் 1,125 புதிய மின் பேருந்துகள் அறிமுகம்

தமிழ்நாட்டில் 1,125 புதிய மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை 950, மதுரை 100, கோவை 75 பேருந்துகள் அடங்கும். 

11:26 AM (IST) Mar 14

டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மாற்றம்

700 டீசல் பேருந்துகள் ரூ.70 கோடி செலவில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:23 AM (IST) Mar 14

இனி சென்னையில் வெள்ள பாதிப்பு வராது! தமிழக பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள், அடையாறு நதி சீரமைப்பு, மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க
11:17 AM (IST) Mar 14

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு

சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு. கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு

11:08 AM (IST) Mar 14

30 இடங்களில் முதலமைச்சர் படைப்பகம்

சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:06 AM (IST) Mar 14

மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம்

கோவளம் அருகே சுமார் 3 அயிரம் ஏக்கர் பரப்பளவில் 350 கோடி ரூபாய் செலவில் புதிய நீர்தேக்கம் அமைக்கப்படும். சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க திருப்போரூரிலும் நீர்தேக்கம் அமைக்கப்படும்.

11:05 AM (IST) Mar 14

சென்னைக்கு அருகில் உலக தர வசதிகளுடன் புதிய நகரம்

சென்னைக்கு அருகில் உலக தர வசதிகளுடன் புதிய நகரம்

Scroll to load tweet…