தமிழக பட்ஜெட்டில் குறு, சிறு தொழில் கடன் உதவி, கடற்கரை மேம்பாடு, பசுமை பேருந்துகள், மெட்ரோ விரிவாக்கம், கைவினைஞர்களுக்கு உதவி, குடிநீர் திட்டம், ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர் உட்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

2025-2026ஆம் ஆண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தது. அந்த வகையில் மெட்ரோ ரயில் திட்டம், ராமேஸ்வரத்தில் விமான நிலையம், கடன் உதவி திட்டங்கள் என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. மேலும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

  • 10 இலட்சம் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 இலட்சம் கோடி வங்கிக் கடன் உதவி
  • 6 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி செய்யப்படும். சென்னை: திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம்
  • விழுப்புரம்: கீழ்புதுப்பட்டு, கடலூர்: சாமியார்பேட்டை
  • 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைத்தல் ரூ.70 கோடி ஒதுக்கீடு
  •  டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்க ரூ.70 கோடி ஒதுக்கீடு
  •  1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். சென்னை: 950, மதுரை: 100, கோயம்புத்தூர்: 75

  • 19,000 கைவினைஞர்களுக்கு மானிய நிதியாக ரூ.74 கோடி ஒதுக்கீடு
  • சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம்
  • விமான நிலையம் - கிளாம்பாக்கம் . 9,335 கோடி ரூபாய் 
  • கோயம்பேடு - பட்டாபிராம் . 9,744 கோடி ரூபாய்
  • பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் . 8,779 கோடி ரூபாய்
  • சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வேளச்சேரி - குருநாத் கல்லூரி வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.

  • கிண்டி & வண்ணாரப்பேட்டையில் பன்முகப் போக்குவரத்து முனையங்கள் அமைகப்படும் இதற்காக தலா ரூ.50 கோடி ஒதுக்கீடு 
  • தனுஷ்கோடியில் பூநாரைப் பறவைகள் சரணாலயம் உருவாக்க நடவடிக்கை
  • சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை
  • மூன்றாம் பாலினத்தவர்களை ஊர்க்காவல் படையில் சேர்ப்பதற்கான திட்டம்
  • ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 29.74 இலட்சம் மக்கள் பயன்பெறும்