கேரளா.. 90 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தமிழக தொழிலாளி - சோகத்தில் முடிந்த 50 மணிநேர மீட்பு போராட்டம்!
சம்பவம் அறிந்து உடனே அங்கு வந்த மீட்பு படையினர் அந்த 90 அடி ஆழ கிணற்றில் விழுந்த மண்ணை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழகத்திலிருந்து தினம்தோறும் பல தொழிலாளர்கள் கேரளாவிற்கு கூலி வேலைக்காகவும், பிற வேலைகளுக்காகவும் சென்று வருகின்றனர். அந்த வகையில் விழிஞ்சம் என்ற பகுதியில் கிணறுக்குள் வளையங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் தமிழக தொழிலாளி மகாராஜன். அவர் கிணற்றுக்குள் தனது பணியில் ஈடுபட்டிருந்தபொழுது திடீர் என ஏற்பட்ட மண் சரிவு அவரை கிணற்றுக்குள் இருந்து வெளியே வர முடியாத அளவிற்கு மூடியது.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்த நிலையில் உடனடியாக விழிஞ்சம் பகுதி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து உடனே அங்கு வந்த மீட்பு படையினர் அந்த 90 அடி ஆழ கிணற்றில் விழுந்த மண்ணை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 24 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அபாயகரமான அளவில் மண்சரிவு ஏற்பட்டதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மீட்பு பணி சிறிது நேரம் கைவிடப்பட்டது.
மகாராஷ்டிரா: 53 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்.. தொடரும் அரசியல் திருப்பங்கள்
அதன் பிறகு 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலப்புழாவிலிருந்து வரவழைக்கப்பட்டது, கொல்லம் பகுதியில் இருந்தும் கிணறு தோண்டும் பணியில் முன்னனுபவம் உள்ள பலர் அங்கு வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் மகாராஜனை மீட்கும் பணி துவங்கியது ஆனால் துரதிஷ்டவசமாக இந்த மீட்பு பணியில் மகாராஜனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
இறுதியாக சுமார் 50 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்று திங்கள் கிழமை அதிகாலை கயிறு கட்டி மகாராஜனின் உடல் மீட்கப்பட்டது.
ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் அசம்பாவிதம்; வேன் கவிழ்ந்து 16 பெண்கள் காயம்