கடல் கடந்து ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள்.. சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் வீழ்ச்சியடைந்தது எப்படி?
சோழர்களின் வரலாறு மிகவும் பழமையானது. மகாபாரதம் ஆகியவற்றில் அசோகரின் கல்வெட்டு ஆகியவற்றில் சோழர்கள் பற்றிய செய்தியை காணலாம்.

உலகின் மிகவும் தொன்மைவாய்ந்த நாகரிங்களில் தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும் ஒன்று. தமிழ்நாட்டில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் குறைந்தபட்சம் கிமு 3000 க்கு முந்தையது. தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படும் சங்க காலம் கிமு 3ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. இந்த நேரத்தில், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் செழித்த வளர்ந்தது.
பல்லவர்கள் ஆட்சி
பண்டைய தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாடு 3 அரசியல் பிரிவுகளை கொண்டதாக இருந்தது. பின்னர் கி.பி 300 முதல் 600 வரை ஏறக்குறைய 300 ஆண்டுகள் களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்டனர். அதன் பின்னர் பலல்வர்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு பல்லவர்கள் ஆட்சி செய்து வந்தனர். பல்லவ அரசர்களின் முதன்மையானவர் சிம்மவிஷ்ணு. இவர் தான் களப்பிரரகளை வீழ்த்தி பல்லவ ஆட்சியை நிறுவினார்.. சோழப் பகுதிகள் சிலவற்றையும் அவர் கைப்பற்றினார். அவரை தொடர்ந்து முதலாம் மகேந்திர வர்மன், முதலாம் நரசிம்ம வர்மன், 2-ம் நரசிம்ம வர்மன், 2-ம் பரமேஸ்வர வர்மன், 2-ம் நந்திவர்மன், என கி.பி 885 வரை பல்லவர்களின் ஆட்சி நீடித்தது. எனினும் 2-ம் நந்திவர்மனுக்கு பிறகு வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் பாண்டியர்கள், சோழர்களுடன் போரிட்டு தோல்வியடைந்தனர். அதன்பின்னர் தொண்டனை மண்டலத்தில் பல்லவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பல்லவர்கள் சிற்பம், இசை, ஓவியம் போன்ற கலைகளில் சிறந்துவிளங்கினர்.
சோழ பேரரசு:
சோழர்களின் வரலாறு மிகவும் பழமையானது. மகாபாரதம் ஆகியவற்றில் அசோகரின் கல்வெட்டு ஆகியவற்றில் சோழர்கள் பற்றிய செய்தியை காணலாம். முற்காலச் சோழர்களில் கரிகாலன் சிறந்துவிளங்கினார். அவர் கட்டிய கல்லணை இன்றளவும் நீர் மேலாண்மைக்கு மிகப்பெரிய சாட்சியாக உள்ளது.
கிபி 9-ம் நூற்றாண்டின் இடையில் ஆட்சிக்கு வந்த சோழர்கள் பிற்கால சோழர்கள் என்று அழைக்கப்பட்டனர். விஜயாலய சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் பிற்கால சோழர்களின் எழுச்சிக்கு வித்திட்டார். ஆதித்தனின் மகன் முதலாம் பராந்தகன் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து மதுரையை வென்றார். அதன்பின்னர் கண்டரதித்தன், அரிஞ்சயன், 2-ம் பராந்தகன், ஆதித்தன், உத்தம் சோழன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என பல மன்னர்கள் ஆண்டனர்.
சோழ மன்னர்களில் மிகச்சிறந்த ஆட்சியாளராக ராஜராஜ சோழன் கருதப்படுகிறார். சேரர், பாண்டியர்கள், சாளுக்கியர்களை போரில் வென்று சோழ பேரரசை விரிவுப்படுத்தினார். இவரின் காலத்தில் சோழப் பேரரசு தென்னிந்தியாவையும் கடந்து பரந்து விரிந்திருந்தது. இவர் கி.பி 1010-ம் ஆண்டில் தஞ்சையில் பெருவுடையார் கோயிலை கட்டினார், பின்னர் 1014-ல் இயற்கை எய்தினார். ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் சோழ பேரரசை கடல் கடந்து விரிவுப்படுத்தினார். வங்காளத்தின் மீது போர் தொடுத்து அதனை வென்றார். பின்ன அதன் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரை நிறுவினார்.
ராஜேந்திர சோழன் காலத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, பீகார், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், பூட்டான், பங்களாதேஷ், வடகிழக்கு இந்தியா, மியான்மர், சீனாவின் சில பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, இலங்கை, அந்தமான் ஆகியவை சோழப் பேரரசின் கீழ் இருந்தது. மேலும் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, புரூயின், சுமத்ரா, வியட்நாம், கொம்போடியா மற்றும் பிலிப்பைன்ஸ் என கடல் எல்லைகளை அப்பால் சோழர்களின் கொடி பறந்தது.
எனவே சோழ வம்சம் அந்த நேரத்தில் உலகின் மிக சக்திவாய்ந்த பேரரசாகவும், உலக வரலாற்றின் மிகப்பெரிய பேரரசர்களில் ஒருவராகவும் மாற்றியது. எனவே உலக வரலாற்றை எழுதும் போது, அசோகர் மற்றும் ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் இந்தியாவில் இருந்து தவிர்க்க முடியாத மன்னர்களாக மாறினர்.
எனினும் சோழ மன்னன் 3-ம் ராஜேந்திரன் (கி.பி 1246-1279) காலத்தில் சோழ பேரரசு சிதைய தொடங்கியது. பாண்டிய மன்னன் 2-ம் ஜடா வர்மன் சுந்த்ர பாண்டியன், சோழ மன்னன் 3-ம் ராஜேந்திரனை வென்று சோழ நாட்டை கைப்பற்றினார். கி.பி 850 – கி.பி 1279 வரை சுமார் 430 ஆண்டுகள் சோழர்கள் தமிழ் நிலத்டை ஆட்சி செய்தனர். அரசியல், நிர்வாகம், தமிழ் இலக்கியம், இசை, கட்டிடக்கலை என அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்கியது.
பாண்டிய பேரரசு :
பழந்தமிழ் இலக்கியங்கள், யுவான்சுவாய், மார்க்கோபோலோ ஆகியோரின் குறிப்புகளில் பாண்டியர்களின் வரலாற்று செய்திகள் உள்ளன. கிபி. 550 முதல் 950 வரை முதலாம் பாண்டிய பேரரசு என்பார்கள். சோழர்களுடன் தொடர்ந்து போரிட்டு வந்ததால் முதலாம் பாண்டிய அரசு சிதறுண்டது. பின்னர் 11-ம் நூற்றாண்டில் பாண்டியர்கள் சோழர்களிடம் இருந்து விடுபட்டு தங்களின் தனியரசை நிறுவினர். பின்னர் முதலாம் மாறவர்மன், இரண்டாம் மாறவர்மன், முதலாம் சடையவர்மன், என 1268 வரை பாண்டியர்கள் ஆட்சி செய்தனர். எனினும் வாரிசுரிமை போரால் பாண்டிய நாடு பிளவுபட்டது. சுந்தரபாண்டியன் டெல்லியை ஆண்ட கில்ஜியின் உதவிய நாடினார். பின்னர் அவர் மாலிக் கபூர் என்பவரை அனுப்பி ஆட்சியை மீட்டு தந்தார். எனினும் கில்ஜி மரபினருக்கு பின் வந்த துக்ளக் மரபினர் தங்களின் ஆதிக்கத்தை தென்னிந்தியாவில் விரிவுப்படுத்தினர். அதன்பின்னர் சுல்தான்கள் எழுச்சி பெற்றதால் பாண்டிய பேரரசு வீழ்ச்சி அடைந்தது.
சேர பேரரசு :
சேர மன்னர்களின் வரலற்றை பதிற்றுப்பத்து நூல்களில் பார்க்கலாம். உதியச்சேரல் என்ற சேர மன்னன் மகாபாரத போரில் கௌரவர், பாண்டவ சேனைகளுக்கு பெருஞ்சோறு வழங்கியதக இலக்கியத்தில் சில குறிப்புகள் காணப்படுகின்றன. அவரின் மகன் இமயவரம்பன், யவனர்களை பல போர்களின் வென்று இமயமலை வரையிலும் படையெடுத்து சென்று ஆரிய மன்னரை வணங்க வைத்தார். சேர மன்னர்களின் சிறப்பு வாய்ந்தவர் சேரன் செங்குட்டுவன்.
சங்ககால நூல்கள் பலவற்றில் சேர வேந்தர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. குறிப்பாக, சங்ககால நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, பத்து சேர வேந்தர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர வேந்தன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன. சேரர்கள் 2 நாடுகளாகப் பிரிந்து ஆட்சி செய்தனர். வடபகுதி கேரளத்தை சுல்தான்களிடம் இழந்தார்கள். தென்பகுதியை மட்டும் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தார்கள்.
சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டிடக்கலை, கலை மற்றும் இலக்கியத்திற்காக அறியப்பட்டன, மேலும் அவை தென்னிந்தியாவின் கலாச்சார நிலப்பரப்பை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன. குறிப்பாக சோழ பேரரசு சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. நீண்ட காலம் சோழர்களே தமிழ்நாட்டை ஆட்சி செய்தனர். கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் (சேர மற்றும் பாண்டியருடன் சேர்ந்து) கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் நிலத்தை சோழ மன்னர்கள் ஆண்டனர். ராணுவம், கடற்படை மற்றும் சர்வதேச வர்த்தக உறவுகளில் மிகவும் வலுவாக இருந்தது. சேர சோழ பாண்டியரின் ஒருங்கிணைந்த படை பலம் அசோகரை விட வலிமையானது. எனவே அசோகர் புத்திசாலித்தனமாக தமிழ் ராஜ்ஜியங்களுடன் முரண்பட வேண்டாம் என்று முடிவு செய்தார்.
பின்னர், முகலாயர், நாயக்கர், மராட்டியர் என பல தமிழகத்தை ஆட்சி செய்தனர். பின்னர் 1498-ல் ஐரோப்பியர்கள் வருகையை அடுத்து, ஆங்கிலேயர்களும் தமிழகத்திற்கு வந்தனர். இதையடுத்து ஒட்டுமொத்த இந்தியாவை போலவே தமிழகமும் சுமார் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.
- chera chola pandya history in tamil
- chera dynasty in tamil
- chola
- chola dynasty
- chola dynasty in tamil
- chola dynasty tamil
- chola empire
- chola empire history in tamil
- chola empire tamil
- chola empire whatsapp status tamil
- chola vs pandyas in tamil
- cholas in tamil
- decline of chola dynasty
- fall of chola dynasty
- fall of chola empire
- pandya dynasty in tamil
- rajendra chola
- rajendra chola empire
- the chola empire
- what happened to chola dynasty