Tamil Film Awards Announced The first prize for Pasanga is the best film for 2009

தமிழ் திரைப்பட விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 2009-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக பசங்க படத்திற்கு முதல் பரிசு அறிவித்துள்ளது.

மேலும் 2010-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மைனா, 2011-ம் ஆண்டு வாகை சூட வா, 2012-ம் ஆண்டு வழக்கு எண் 18/9 , 2013- ம் ஆண்டு ராமானுஜர், 2014-ம் ஆண்டு குற்றம் கடிதல் ஆகிய படங்கள் தேர்வு செய்பட்டுள்ளது.

2009-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது கரணுக்கு கிடைத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு விக்ரமிற்கும், 2011 ஆம் ஆண்டு விமலுக்கும், 2012 ஆம் ஆண்டு ஜீவாவுக்கும் 2013 ஆம் ஆண்டு ஆர்யாவுக்கும், 2014 ஆம் ஆண்டு சித்தார்த்துக்கும் தமிழக அரசு விருதுகளை அறிவித்துள்ளது.

2009-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருது பத்மபிரியாவுக்கு கிடைத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு அமலாபாலுக்கும், 2011 ஆம் ஆண்டு இனியாக்கும், 2012 ஆம் ஆண்டு லட்சுமி மேனனுக்கும் 2013 ஆம் ஆண்டு நயந்தாராவுக்கும், 2014 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ்க்கும் தமிழக அரசு விருதுகளை அறிவித்துள்ளது.