Asianet News TamilAsianet News Tamil

தமிழ் கலாசாரமும், நாகரிகமும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது - ஆளுநர் ரவி புகழாரம்

இந்தியாவின் ஜி20 மாநாட்டிற்கு இளைஞர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.‌ரவி தெரிவித்துள்ளார்.

tamil culture have a more thousands of years more tradition says governor rn ravi
Author
First Published Mar 20, 2023, 4:48 PM IST

கோவை குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஜி 20 இளம்தூதுவர் உச்சி மாநாடு 2023 "உலக இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான தூண்டுகோல்" என்ற தலைப்பில் நடைபெற்றது. கவுரவ விருந்தினராக ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழ் கலாசாரம், நாகரிகம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இங்கு ஏராளமான புலவர்கள், தத்துவ அறிஞர்கள் உள்ளனர். தற்போது இயற்கை தொடர்பான பிரச்சினை, உணவு பஞ்சம், பொருளாதார ரீதியான பாதிப்பு, போர்கள் இருக்கிறது. உலகளவில் ஒரு அமைதியான சூழல் இல்லாத நிலை உள்ளது. 

முதல்வருடன் நேருக்கு நேர் வாதம் செய்த அரசு ஊழியர்கள்; டென்ஷனான முதல்வரால் பரபரப்பு

ஆண், பெண் பாலினம் தொடர்பாக உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளன.  வேளாண்மை துறையில் பாதிப்பு உள்ளது. பல்வேறு நாடுகளில் வறுமை நிலை உள்ளது. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மாநாட்டில் தீர்வு காண வேண்டும். கொரோனா பாதிப்பு காலத்தில் தலைசிறந்த நாடுகள் மருந்துகள், தடுப்பூசிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டன.‌ அந்த நேரத்தில் நம் விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்த தடுப்பூசியை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டது. இலவசமாக நம் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டன. இந்தியாவின் கலாச்சாரம், ஆன்மீகம் பல ஆண்டுகள் பழமையானது. பாரத நாட்டை பற்றி  இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பல நாடுகள் ராணுவம் கட்டமைப்பை பலப்படுத்தி பிற நாடுகளை துன்புறுத்தி வருகிறது.‌ ஆனால், நாம் யாரையும் துன்புறுத்துவது இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது நம் டிஎன்ஏ-வில் உள்ளது.  பிரிட்டிஷ் அரசு சென்ற பிறகு நமது பாலிசிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பல முன்னேற்றங்களை அடைந்து உள்ளோம். 

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி இருந்தாலும் வடக்கு, தெற்கு என‌ பிரிந்து உள்ளோம். இதனால் பிரதமர் ஒரு குடும்பம் என்ற நிலை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். 

கோவையில் பயங்கரம்; சீறிப்பாய்ந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து 2 பேர் பலி

குடும்பம் என்றால் நம்பிக்கை. அதனால் நீங்கள் அனைவரையும் நம்ப வேண்டும். இது மக்களுக்கான  மைய ஆட்சி.  இந்த ஜி20 இளைஞர் தூதுவர் மாநாடு மிகவும் முக்கியமானது. இளைஞர்களுக்கான வருங்காலம் பற்றி பேச உள்ளது. நீங்கள் தான் எதிர்காலம். எனவே உங்களின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்க வேண்டும். இல்லை என்றால் தலைவர்கள் வழங்கும் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, இளைஞர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கி உரிய பங்களிப்பு அளிக்க வேண்டும்.

இளைஞர்கள் நீங்கள் தான் நம் அடுத்த தலைவர்கள் என்பதை புரிந்து உங்களை நீங்களே தயார் படுத்தி கொள்ள வேண்டும். இளைஞர்கள் தூதுவர்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். அது உங்கள் எதிர்காலம், கனவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும். 

இந்தியாவில் நீண்ட காலத்திற்கு பிறகு ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளனர்.‌ தமிழகத்தில் 50 ஆயிரம் பெண்கள் அதிகமாக உள்ளனர். பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர்.  இது எப்படி நடந்தது என்பதை குறித்து கவனமாக ஆராய வேண்டும். அனைத்து மாணவர்கள், இளைஞர்கள் தங்களுக்குள் உள்ள தொடர்பை வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம் உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios