Asianet News TamilAsianet News Tamil

ஏடிஎம்களில் தமிழ் மொழி புறக்கணிப்பு.. கொந்தளித்த நெட்டிசன்கள் - விளக்கமளித்த அமைச்சர் பிடிஆர்!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக எழுந்த புகார்களுக்கு விளக்கமளித்துள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

Tamil Boycott at SBI Bank ATMs Explained by Minister ptr palanivel thiagarajan
Author
First Published Nov 16, 2022, 7:50 PM IST

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் பயனாளர் சேவைகளுக்கான மொழி தேர்ந்தெடுப்பில் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மட்டுமே ஏடிஎம் திரையில் காண்பிக்கிறது.

இதுகுறித்து தொடர்ச்சியாக குற்றச்சாட்டு மற்றும் போட்டோ ஆதாரங்களுடன் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை டிவிட்டரில் டேக் செய்து கேள்வி தொடர்ந்து கேள்வி எழுப்பினார்கள்.

Tamil Boycott at SBI Bank ATMs Explained by Minister ptr palanivel thiagarajan

இதையும் படிங்க..கல்லூரிகளில் ராகிங் கொடுமையா.? கடும் நடவடிக்கை பாயும் - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு !

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். ட்விட்டரில் பதிவிட அவர், தமிழகத்தின் அனைத்து வங்கிகளிடமும் நிதித்துறை ஏற்கனவே இந்த பிரச்சனையை குறிப்பிட்டுள்ளது. இது ஒரு அசாதாரண செயல்பாட்டு பிழை ஆகும். இதுபற்றி எங்கள் துறை செயலாளர்கள் இன்று வங்கியின் கவனத்திற்கு கொண்டு சென்று, சரி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க..டெக்ஸ்டர் சீரிஸ்.! புது பிரிட்ஜ்.! வேறொரு பெண்ணுடன் அவுட்டிங்.! கொடூரமாக கொல்லப்பட்ட காதலி

இதையும் படிங்க..உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா முதல்வரே.? திமுகவை அட்டாக் செய்த பாஜக !

Follow Us:
Download App:
  • android
  • ios