உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா முதல்வரே.? திமுகவை அட்டாக் செய்த பாஜக !

தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, திமுக ஆட்சியை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Tn bjp vice president narayanan thirupathy against mk stalin

தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ரத்தம் கொதிக்கிறது. இந்த ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன ?

என்று டிசம்பர் 26,2018 அன்று சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தவறுதலாக ஹெச்ஐவி ரத்தம் செலுத்திய விவாகரத்தில் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் விமர்சித்திருந்தார்.

Tn bjp vice president narayanan thirupathy against mk stalin

இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

நேற்று, இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின்  கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியா என்ற 17 வயது சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால் அந்த சிறுமியின் உயிர் பிரிந்து விட்டது.

Tn bjp vice president narayanan thirupathy against mk stalin

இப்போது ரத்தம் கொதிக்கவில்லையா திரு.ஸ்டாலின் அவர்களே ? இது ஊழல் அரசு என்பதையும்,உங்கள் ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனை எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதை விட உதாரணம் வேண்டியதில்லை என்பதையும் ஒப்பு கொள்கிறீர்களா முதல்வர் அவர்களே ? சொன்னது நீ தானா சொல் சொல் சொல்… என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க..டெக்ஸ்டர் சீரிஸ்.! புது பிரிட்ஜ்.! வேறொரு பெண்ணுடன் அவுட்டிங்.! கொடூரமாக கொல்லப்பட்ட காதலி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios