கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Kallakurichi srimathi murder case suddent twist

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி ஜூலை 13ஆம் தேதி அதிகாலை விடுதி வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என கூறப்படுகிறது.

அவரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் முன்னதாக சின்னசேலம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவானது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசரணையின்போது, மாணவி இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணை சரியில்லை என்றும் அவரது தாய் தொடர்ந்து குற்றச் சாட்டுக்களை கூறி வருகிறார். வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்த உயர்நீதிமன்றம்,விசாரணை தொடர்பான  அறிக்கைகளை பெற்று வருகிறது.

Kallakurichi srimathi murder case suddent twist

இதையும் படிங்க..பால் விலை உயர்வு - தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு !

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலன் விசாரணை குழு மற்றும் சிபிசிஐடி ஆகியவற்றின் அறிக்கைகளை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார். 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறினார்.

பிறகு மனுதாரர் ராமலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் செல்போனை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் என்றில்லை. அதை ஒப்படைப்பது குறித்து விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் கோரினார். உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை என்று வாதிட்டார்.

Kallakurichi srimathi murder case suddent twist

பிறகு நீதிபதி, உடற்கூறாய்வு மூலம் எப்படி இறந்தார்கள் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போன் உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் நியாயமான விசாரணை கேட்கும் மனுதாரர் தனது மகள் பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

செல்போனை ஒப்படைத்தது தொடர்பாக மனுத்தாக்கல் செய்ய பெற்றோருக்கும், அதை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார். கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு நீதிபதி விதித்த உத்தரவு திடீர் திருப்பத்தை ஏற்படுத்துமா ? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க..2 கோடிக்கு கிராமம் விற்பனை.! நல்ல ஆஃபர் யார் வேணாலும் வாங்கலாம் !! இவ்வளவு வசதிகள் இருக்கா ?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios