Swathi murder case is going take as a film

ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி மென்பொறியாளர் ஸ்வாதியின் கொலைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரைப்படத்தின் டிரேய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஸ்வாதி அனைவரது முன்னிலையிலும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்தது. விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கிய ராம்குமார் ஸ்வாதியை ஒரு தலையாகக் காதலித்ததாகவும், ஆனால் இக்காதலை ஏற்க ஸ்வாதி மறுத்ததால் அவரை ராம்குமார் கொலை செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ராம்குமாரை கைது செய்ய முயன்ற போது பிளேடால் அவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. இதுவே பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத் துறை அறிவித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இந்தச் சூழலில் ஸ்வாதியின் கொலைச் சம்பவத்தை வைத்து ரமேஷ் செல்வன் என்பவர் புதிய படத்தை இயக்கி உள்ளார். இதன் டிரெய்லர் வெளியிடப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.