sushma swaraj is seeking groom for geetha

இந்த பெண்ணுக்காக 60 பேர் போட்டி..! மாப்பிள்ளை தேடும் பணியில் சஷ்மா ஸ்வராஜ்..!

ஒரு பெண்ணிற்கு நல்ல வரன் கிடைப்பதில் இருக்கும் சந்தோசம் என்பது அளப்பரியது.

அந்த வகையில் தற்போது ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இதுவரை 60 கும் மேற்பட்டோர் ஆர்வம் காட்டி உள்ளனர்.

யார் இந்த பெண்.. இவருக்கு யார் மாப்பிள்ளை தேடுகிறார் என்று உங்களுக்கு தெரியுமா...?

இந்தியாவிலிருந்து வழி தவறி சிறிய வயதிலேயே பாகிஸ்தானுக்கு சென்றவர் தான் இந்த பெண். இவருக்கு காது கேட்காது,பேசவும் முடியாது

இவர் பாகிஸ்தானுக்கு கடத்தி செல்லப்பட்டாரா? அல்லது தவறி அங்கு சென்று விட்டாரா என்று அவருக்கே தெரியவில்லை.....

சம்ஜ்ஹூதா ரயிலில் தனியாக அமர்ந்து இருந்த அந்த சிறுமையை மீட்டு பாகீஸ்தானில் இருக்குகிற ஹோமில் சேர்க்கப்பட்டார்.

எப்படியாவது இந்த சிறுமியை அவருடைய பூர்வீகம் தெரிந்துக்கொண்டு ஒப்படைக்க வேண்டும் என முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், கடைசியில் அவர் இந்தியாவில் இருந்து தான் அன்கு சென்று உள்ளார் என்ற உண்மை மட்டும் தெரியவர அங்கிருந்து அவரை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என மக்களிடம் கோரிக்கை வலுத்தது

பின்னர் ஒருவழியாக கடந்த 2015 ஆம் ஆண்டு, அந்த பெண் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டார். அவருக்கு கீதா என பெயரிடப்பட்டிருந்தது.

பின்னர் கீதாவை சொந்தம் கொண்டாட சில பெற்றோர்கள் வந்தாலும், அவர்கள் யாரையும் கீதாவுக்கு தெரிய வில்லை.. சொந்தம் கொண்டாடியவர்களுக்கும் தெரியவில்லை...

இதனை தொடர்ந்து கீதாவிற்கு கன்யா தானம் செய்ய முன் வந்த முதல்வர்

கீதாவிற்கு என அப்பா ஸ்தானத்தில் இருந்து நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக , அவருக்கு திருமணம் செய்து வைக்க முன்வந்தார் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்

அக்கறை கொண்ட சுஷ்மா ஸ்வராஜ்

கீதாவிற்கு பெண் மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை சிவில் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப் பட்து உள்ளது. இதுவரை 6௦ பேருக்கும் மேற்பட்டோர் கீதாவை திருமணம் செய்துகொள்ள ஆர்வம் காட்டி உள்ளனர்

மேலும் சுஷ்மாவும் கீதாவை பற்றியும், கீதாவிற்கு திருமண ஏற்பாடு நடந்து வருகிறது என்பதை பற்றி தெரிவித்து விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து உள்ளார்

மேலும் அவர்கள் வாய் பேச முடியாத ஆணாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டு இருந்தது

தற்போது கீதாவிற்கு பாதுகாவலரா இருந்து வரும் மோனிகா, "கீதாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் ..அதற்காக நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என தெரிவித்து உள்ளார்.

மேலும் கீதாவை திருமணம் செய்துக்கொள்ளும் நபருக்கு அரசு வேலையும் , இவர்களுக்காக ஒரு வீடும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 இருந்தாலும், கணவரை தேர்வு செய்யும் பொறுப்பு கீதாவிடமே ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.