பொன்முடி அமைச்சர் ஆவதற்கு எதிரான வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

பொன்முடி அமைச்சராக்குவதற்கு எதிரான ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்க உள்ளது.

Supreme Court to hear TN Govt plea against Governor RN Ravi tomorrow sgb

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வகைக்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு நாளை (வியாழக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

பொன்முடி அமைச்சராக்குவதற்கு எதிரான ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்க உள்ளது.

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, அவர் மார்ச் 13ஆம் தேதி முதல் மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார்.

இதன் தொடர்ச்சியாக பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க தமிழக அரசு முடிவு செய்த்து. இதற்காக பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்ச் 13ஆம் தேதி கடிதம் எழுதினார்.

கடிதம் கிடைத்த மறுநாள் ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதனால் ஆளுநர் சனிக்கிழமை சென்னை திரும்பியதும் பொன்முடி அமைச்சராகப் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. சபாநாயகர் அப்பாவுவும் ஆளுநர் டெல்லியில் இருந்து வந்தவுடன் பொன்முடியின் பதவிப் பிரமாணம் நடக்கும் என்று கூறியிருந்தார்.

ஆனால், டெல்லியில் இருந்து திரும்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடியை அமைச்சராக்க முடியாது என்று பதில் அளித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்றும் தீர்ப்பை மட்டுமே நிறுத்தி வைத்திருக்கிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios