ஆசிரியராக பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் தகுதித்தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

ஆசிரியர்கள் பணியில் தொடர்வது, பணி உயர்வு பெறுவது தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, “ஆசிரியராக பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகள் மட்மே இருந்தால் அவர்கள் பணியில் தொடரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 5 ஆண்டுகளுக்கு மேலும் பணி காலம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் பணியில் தொடர விரும்பினால் டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும். ஆசிரியர்கள் டெட் தேர்வில் தகுதி பெறாத பட்சத்தில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது நிபந்தனைகளுடன் கூடிய கட்டாய ஓய்வு பெறலாம் என்று தெரிவக்கப்பட்டு உள்ளது.

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் நபர்கள் மட்டுமே ஆசிரியராக பணியில் சேர முடியும் நிலை உள்ளது.