Supply of alcoholics in ration lorry

தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி வந்த நிலையில், ரேஷன் பொருட்கள் அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட லாரியில் மதுபாட்டில்கள் கொண்டு சப்ளை செய்யப்பட்டுள்ள சம்பவம் கரூரில் நடந்துள்ளது.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள பாலவிடு, ரெட்டியப்பட்டி பகுதிகளில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

டாஸ்மாக் கடைகள் செயல்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றும்படி பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டிகள் சப்ளை செய்ய, ரேஷன் பொருட்கள் அவசம் என்று லாரியில் எழுதி மதுபாட்டில்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளது. 

அந்த பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த புள்ளி ராமமூர்த்தி என்பவர் ரெட்டியப்பட்டி அருகே சென்றுள்ளார். அப்போது சாலையோரம் நின்ற ரேஷன் பொருட்கள் அவசரம் என்ற லாரியை பார்த்திருக்கிறார்.

ஆனால், லாரியில் மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் அடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியானார். இது குறித்து லாரியில் இருந்தவர்களிடம விசாரித்திருக்கிறார்.

கானட்ராக்டர் பாலு என்பவர் தங்களை இந்த லாரியில் மதுபாட்டில்களோடு ஏற்றி அனுப்பினார் என்றும், பாலவிடுதி - ரெட்டியப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை இறக்கிவிட்டு வரும்படி அனுப்பியதாக அவர்கள் கூறிவிட்டு லாரியை எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.