தமிழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்கள் அவமானப்படுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூகுள் சிஇஓ, சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏழை குடும்பத்தில் பிறந்தவன் என்ற முறையில், தமிழக மருத்து மாணவர்களின் வலியை பகிர்ந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு என்பது பொது மக்களை மிரட்டும் வகையிலும், உண்மையிலேயே நல்ல திறமையுடையவர்களை அழிக்கும் வகையிலும் உள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

மேலும் நீட் போன்ற தேர்வை என்னைப் போன்றவர்கள் எழுத வேண்டியிருந்தால் கூகுள் சிஇஓ போன்ற ஓர் உயர்ந்த இடத்தை அடைந்திருக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவர்களது ஆடைகளை களைந்து அவமானப்படுத்தியிருப்பது அரசுக்கு தீராத வெட்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மாணவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்றும் அவர்களது உணர்வுகளை அரசு புரிந்து கொள்ள வேண்டும் எனறும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அவமானப்படுத்த இந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்  என்றும் தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.