வாட்டி வதைத்த வெயில்:

கோடை காலம் துவங்கி விட்டதால், மக்களை வெயில் வாட்டி வதக்கி வருகிறது. ஊரடங்கு உத்தரவால் இந்திய மக்கள் அனைவரும் வீட்டின் உள்ளேயே அடைபட்டிருந்தாலும், புழுக்கம், உடல் எரிச்சல் போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தனர்.

தமிழகத்தில் 100 டிகிரி வெயில்:

இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெயில் மண்டையை உடைக்கிறது. 

மதுரையில்102 டிகிரி வெட்பம் அதிக பட்சமாக கடந்த வாரம் பதிவானது. மேலும் 6 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. 

தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வரும் தருணத்தில் கோவை, தர்மபுரி, கரூர், சேலம், திருத்தணி, திருவள்ளூர்ஆகிய இடங்களில் 100  டிகிரி வெப்பம் பதிவாகி மக்களை சோர்வடைய வைத்தது

கொட்டிய கோடை மழை:

தொடர்ந்து சுட்டெரித்து வந்த கோடை வெயிலை தணிக்கும் விதமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை கொட்டி தீர்த்து மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அந்த வகையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு சுற்றுவட்டார பகுதிகள், கொடைக்கானல், கோவில்பட்டி,  அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, போன்ற பகுதிகளில் கோடை மழை பொழிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.