sugarcane farmers protest

கரும்புக்கான நிலுவைத்தொகையை பெற்றுத்தர வலியுறுத்தி கரும்பு விவசாயிகள், சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 24 தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. இந்த சர்க்கரை ஆலைகளிலிருந்து கடந்த 4 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய 2000 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் தமிழக அரசு அறிவித்த விலையை தர மறுக்கும் தனியார் ஆலைகளிடமிருந்து அந்த தொகையை பெற்றுத்தர வேண்டும், 2017-18-ம் பருவ ஆண்டிற்கான கரும்புக்கான பரிந்துரை விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் கரும்பு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.