சூறாவளி காற்றோடு சுற்றி அடிக்கும் புயல்.! சென்னையில் புறநகர் ரயில்கள் நாள் முழுவதும் ரத்து

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக சென்னையில் இரவு முழுவதும் கனமழை கொட்டி வருவதன் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது

Suburban electric train service has been canceled due to heavy rains in Chennai KAK

வடகிழக்கு பருவமழை தீவமடைந்து வருவதன் காரணமாக வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது இந்த புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. 

Suburban electric train service has been canceled due to heavy rains in Chennai KAK

சென்னையில் அண்ணா நகர், எழும்பூர், கிண்டி, வடபழனி,பெரம்பூர், அம்பத்தூர், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீரானது நான்கடி உயரத்திற்கு தேங்கி உள்ளது. உதன் காரணமாக போக்குவரத்தானது ஸ்தம்பித்துப் போய் உள்ளது. மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது பல இடங்களில் மெட்ரோ ரயில் நிலையம் முன்பாக தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் மின்சார ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.  பல்வேறு இடங்களில் உள்ள தண்டவாளம் முழுவதும் தண்ணீரால் நிரம்பி உள்ளதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரயில் சேவையும் இன்று முழுவதும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios