subramanian sucide case transfer to cbcid
அமைச்சர் விஜய பாஸ்கரின் நண்பர் மோகனூர் சுப்ரமணியன் தற்கொலை வழக்கு…சிபிசிஐடி க்கு மாற்றி டிஜிபி உத்தரவு…
தற்கொலை செய்து கொண்ட நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியனின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் - மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வந்தவர் காண்டிராக்டர் சுப்பிரமணியன் /புதுக்கோட்டையில் அரசு மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணியை செய்ததால் இவருக்கும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆனதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அதே நாளில் நாமக்கல்லில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள பண்னை வீட்டில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து சுப்ரமணியன் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கை நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்,விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் உத்தரவிட்டிருந்தார். இந் நிலையில் சுப்ரமணியன் தற்கொலை வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
