Asianet News TamilAsianet News Tamil

படித்தது சென்னை ஐஐடியில்.. துபாயில் கைநிறைய சம்பளம்.. காதலிக்காக திருடனாக மாறிய நபர்..

நபர் ஒருவர் துபாயில் அதிக சம்பளம் கிடைத்த தனது வேலையை விட்டு, தனது காதலிக்காக திருடனாக மாறி உள்ளார்.

Studied in Chennai IIT.. Big salary in Dubai.. Man who became a thief for girlfriend..
Author
First Published Apr 24, 2023, 9:51 AM IST

காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் பலர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். தங்கள் அன்புக்குரியவர்களுக்காக பைத்தியகாரத்தனமான செயல்களையும் அவர்கள் செய்கின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆம்.. 40 வயதான ஹெமந்த் குமார் ரகு என்ற நபர் நபர் துபாயில் அதிக சம்பளம் கிடைத்த தனது வேலையை விட்டு, தனது காதலிக்காக திருடனாக மாறி உள்ளார். அவதனது 3 கூட்டாளிகளுடன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.  

ஹேமந்த் குமார் ரகு பெண் ஒருவரிடம் இருந்து ரூ.2.2 லட்சம் பணத்தை திருடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து பணம், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் 2 திருடப்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : திமுகவிற்கு செக் வைக்கிறதா மத்திய அரசு..! ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி சோதனை

ஹேமந்த் குமார் ரகு திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை ஐஐடியில் படித்த இவர், துபாயில் ஒரு எம்.என்.சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், நைட் கிளப்பில் டான்சராக இருந்து வந்த தனது காதலிக்காக வேலை விட்டுவிட்டார் என்றும் விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தான் துபாயில் வேலைபார்த்த போது முசாபர்பூர் சேர்ந்த பெண் ஒருவர் நைட் கிளப்பில் டான்ஸ் ஆடி வந்ததாகவும், அந்த பெண் மீது தனக்கு காதல் ஏற்பட்டதாகவும் ஹேமந்த் குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அப்பெண் மீது இருந்து காதல் காரணமாக, நைட் கிளப் டான்சர் வேலையை விடும் படி தான் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் கடந்த ஆண்டு பீகார் வந்துள்ளனர்.

தான் ஒட்டுமொத்தமாக சேமித்த பணத்தையும், தனது காதலிக்காக செலவு செய்துவிட்டதாகவும், அதன்பின்னர் செலவுக்காக திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட தொடங்கியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து குற்றவாளிகளுடன் இணைந்து ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி துல்லியமான திட்டமிடலுடன் திருட்டு செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : ஜி ஸ்கொயர் திமுக முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதா.? ஆதாரங்களோடு அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த நிறுனவம்

Follow Us:
Download App:
  • android
  • ios